மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் அவரது இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் மூவியாக மிகப்பெரிய வரவேற்பை அடையாளத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 3 படங்களில் நட்சத்திர இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் லியோ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ். இந்த படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை டைரக்ட் செய்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் இந்தி நடிகர் அமீர்கான் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியை தரவில்லை.
மேலும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்த கதைக்களமும், படத்தில் நட்சத்திர கேரக்டர்களுக்கு தரப்பட்ட சொதப்பலான காட்சிகளும் ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியது. இதனால் கூலி படத்துக்கு மிக மோசமான நெகட்டிவ் விமர்சனங்களை கிடைத்தன.
அத்துடன் இந்த படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியதால் ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டு அதுவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. இது வணிக ரீதியாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நஷ்டத்தை கொடுத்தது. எனினும் எப்படியோ 500 கோடி ரூபாய்க்கு படம் வசூலித்து விட்டது. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்குவதாக இருந்தது.
ஆனால் இந்த படத்தில் அவர் தனது சம்பளத்தை ரூ. 75 கோடியாக உயர்த்தியது கைதி 2 பட தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது. இதனால் நடிகர் கார்த்தி சம்பளம் உள்பட மற்ற செலவுகளால் படத்தின் பட்ஜெட் ரூ.190 கோடிக்கு மேல் வந்தது. அதனால் கைதி 2 படம் வேண்டாம் என்ற முடிவெடுத்த தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சம்பளத்தை குறைக்க முன்வந்திருப்பதாகவும் விரைவில் கைதி 2 படம் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





