- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையில் 100 நாட்கள் ஓடிய மகாராஜா - டைரக்டருக்கு கிடைத்த...

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையில் 100 நாட்கள் ஓடிய மகாராஜா – டைரக்டருக்கு கிடைத்த காஸ்ட்லி பரிசு, ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கதையம்சம் உள்ள படங்கள் என்பது எப்போதாவதுதான் அத்திப் பூ பூத்தது போல வெளிவருகின்றன. ஏனென்றால் ஹீரோயிசம் காட்டும் கமர்சியல் படங்கள்தான் தமிழ் சினிமாவின் தலையெழுத்தாக கடந்த பல ஆண்டுகளாக மாறி இருக்கிறது. எப்போதுமே ஹீரோவை கொம்பு முளைத்தவர்களைப் போல, கொம்பாதி கொம்பனாக காட்டுவது மட்டுமே தமிழ் சினிமா இயக்குனர்களின் முக்கிய கடமையாக இருந்து வருகிறது.

ஆனால் யதார்த்தமான படங்களைதான் ரசிகர்கள் எப்போதுமே விரும்புகிறார்கள், வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். அங்கே நடிகர்களோ, படத்தின் பிரம்மாண்டமோ அவசியமாக இருப்பதில்லை. மனதுக்கு இதமான, மனதைக் கவரும் விதமான, உணர்வுபூர்வமான படங்கள் என்பதை ரசிகர்கள் எப்போதுமே பலமாக வரவேற்று தங்கள் தலையில் வைத்து கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில்தான் காக்கா முட்டை, குட்நைட், சித்தா, மகாராஜா, வாழை சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து உள்ளிட்ட படங்கள் வரை ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை தந்து கொண்டிருக்கின்றனர். ஒரு படம் என்பது ரசிகருக்கு நினைவுகளில் எப்போதும் தங்கும் ஒரு படைப்பாக இருக்க வேண்டும்.

அப்படித்தான் பல இயக்குனர்கள் அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை உருவாக்கினார்கள். அதனால்தான் இப்போதும் அந்த படங்களை பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக கமர்ஷியல் படங்கள் என்ற பெயரில் சில இயக்குனர்கள் குப்பை படங்களாக எடுத்து தள்ளுகின்றனர். அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களை தியேட்டருக்கு உற்சாகப்படுத்துமே தவிர, வெளியே வந்த பிறகு அந்த படம் ரசிகர்களின் நினைவில் தங்கப் போவதில்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை.

சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் மகாராஜா வெளியானது. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை, ஆதரவை பெற்றது. இது விஜய் சேதுபதி நடித்த 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது மட்டுமின்றி, தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய படமாகவும் வெற்றி பெற்றது.

அதேபோல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து, அங்கும் 150 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு சொகுசு கார் ஒன்றை படக்குழு பரிசாக வழங்கியிருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழு இந்த பரிசை நேரில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு வழங்கி உள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 Actor Vijay Sethupathi

சற்று முன்