- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது மகளிர் போலீசார் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு - என்ன பாஸ்,...

பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது மகளிர் போலீசார் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு – என்ன பாஸ், நீங்களுமா இப்படி?

- Advertisement -

விஜய் டிவியில், கடந்த 2017ம் ஆண்டு முதல், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு, பலவிதமான டாஸ்க்குகள் தரப்படும். அதில் அவர்கள் தங்களது திறமையை காட்டி வெற்றி பெற வேண்டும். வாரந்தோறும் பார்வையாளர்களின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில், குறைந்த ஓட்டு பெற்றோர் வெளியேற்றப்படுவர்.

முதலில் மிக சுவாரசியமான போட்டிகளுடன் நடத்தப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, ஒரு கட்டத்துக்கு பிறகு போட்டியாளர்களுக்குள் ஏற்படும் போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் குணம், கோள்மூட்டுதல் போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தந்ததால் நிகழ்ச்சி, வேறு மாதிரியாக சென்றது.

ஆரோக்கியமான போட்டிகளை நடத்தாமல், போட்டியாளர்கள் வீட்டுக்குள் செய்யும் பிரச்னைகளை மையப்படுத்தியே நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால், ஒரு கட்டத்துக்கு பிறகு, போட்டியாளர்களின் பர்சனல் லைப் குறித்த கேள்வியும், விமர்சனமும் பார்வையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்து விட்டது. அதனால், கடந்த சில சீசன்களாக பிரபலமானவர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தவிர்க்கின்றனர். இப்போது பிக்பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், சீசன் 6ல் அதாவது கடந்தாண்டு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்தான் விக்ரமன். பத்திரிகையாளரான இவர், இறுதி போட்டி வரை வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அசீம் என்பவரை டைட்டில் வின்னராக கமல் அறிவித்தார். விக்ரமன் ரன்னராக வெற்றி பெற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் அறம் வெல்லும் என்ற மந்திரத்தை கொண்டவராக, மிக நேர்மையானவராக நடந்து, பார்வையாளர்களின் நன்மதிப்பை பெற்றவர் விக்ரமன்.

இந்நிலையில், சென்னை பெருங்குடியை சேர்ந்தவரும், லண்டனில் வசித்து வரும் பெண் ஒருவர், விக்ரமன் மீது, சென்னையில் உள்ள வடபழனி மகளிர் போலீசில் ஆன்லைன் புகார் அளித்துள்ளார். அதில், சமூகவலைதளம் மூலம் விக்ரமன் அறிமுகமானார். நாளடைவில் நன்றாக பழகிய அவர், என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறினார். என்னிடம் இருந்து, 13 லட்சம் ரூபாய் ரொக்கம், விலை உயர்ந்த லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி விட்டார்.

இதுகுறித்து விக்ரமனிடம் கேட்ட போது, சாதி ரீதியாக பேசி என்னை துன்புறுத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, வடபழனி அனைத்து மகளிர் போலீசார் மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விக்ரமன் மீது வழக்குப்பதிவு செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்