முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் 8000 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. தமிழ்நாட்டில் 700க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸாக உள்ளது. கடந்த 6 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கி கிடந்த ஜனநாயகன் படம் ஒரு வழியாக சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கிய நிலையில் இன்னும் 4 நாட்களில் திரைக்கு வர இருக்கிறது.
இது விஜய் ரசிகர்களை தவெக தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. எனினும் இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இணையத்தில் கசிந்து விட்டது. பெரும்பாலான விஜய் ரசிகர்கள் அப்போதே இந்த படத்தை பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர் இந்த படத்தை முழுவதுமாக கேபிள் டிவியில் ஒளிபரப்பும் செய்துவிட்டார். இது தொடர்பாக அவர் கைதும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஏறக்குறைய பெரும்பாலானவர்கள் ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டதாக ஒரு புகார் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் ஜனநாயகன் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தெலுங்கில் நடிகர் பாலய்யா நடித்த பகவந்த் கேசரி என்ற திரைப்படம் தான் ரீ மேக் செய்யப்பட்டு தமிழில் ஜனநாயகன் படமாக உருவாகியுள்ளது. இதில் பாலய்யா நடித்த கேரக்டரில் தான் நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.
மேலும் தெலுங்கில் ஸ்ரீலீலா நடித்த மகள் கேரக்டரில் தான் தமிழில் மமீதா பைஜூ விஜய்க்கு மகளாக நடித்துள்ளார். ஏற்கனவே இணையத்தில் ஜனநாயகன் படம் கசிந்து விட்டதால் ஒரு முக்கிய அதிரடி நடவடிக்கையை படக்குழு எடுத்துள்ளது. அதாவது ஜனநாயகன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி அமைத்துள்ளனர். இணையத்தில் வந்த ஜனநாயகன் காட்சிக்கும் தியேட்டரில் வெளியாகும் ஜனநாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கும் சம்பந்தமே இருக்காது.
அந்த மாதிரியான ஒரு புது கோணத்தில் கிளைமாக்ஸ்சை மாற்றி அமைத்துள்ளதாக இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். அதனால் இணையத்தில் ஜனநாயகன் படத்தை பார்த்தவர்களும் தியேட்டரில் வெளியாகும் ஜனநாயகன் படத்தை பார்க்கும் வகையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





