- Advertisement -
Homeபொழுதுபோக்குபெத்தாரே… வாழ்க்கையே கொண்டாட்டமா இருக்கப் போகுதடா… - சூரியின் பாசத்தை சொல்லும் மாமன் படம் டிரெய்லர்...

பெத்தாரே… வாழ்க்கையே கொண்டாட்டமா இருக்கப் போகுதடா… – சூரியின் பாசத்தை சொல்லும் மாமன் படம் டிரெய்லர் வெளியீடு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாறியவர் நடிகர் சூரி. அடுத்து விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களில் சூரி தொடர்ந்து நாயகனாக நடித்த நிலையில் இப்போது மாமன் என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார்.

அடுத்து மண்டாடி என்ற படத்திலும் நடிகர் சூரி நடித்து வருகிறார். இது மீனவர்களின் வாழ்க்கை கதையை பின்னணியாக கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். மதிமாறன் புகழேந்தி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். நடிகை மகிமா நம்பியார் நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

- Advertisement -

அதற்கு முன்பாக விலங்கு வெப் சீரியஸை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். சூரியின் அக்காவாக ரப்பர் பந்து நடிகை சுவாசிகா நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண் ஜெயபிரகாஷ் பாபா பாஸ்கர் விஜி சந்திரசேகர் பால சரவணன் கீதா கைலாசம் மாஸ்டர் பிரகீத் சிவன் நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மாமன் படத்திற்கு ஹேசாம் அப்துல் வகாப் இசையமைத்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

- Advertisement -

அக்கா கேரக்டரில் நடித்துள்ள சுவாசிகாவின் மகனுக்கும், தாய்மாமன் நடிகர் சூரிக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக சொல்லும் ஒரு படைப்பாக மாமன் படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினர் விரும்பி ரசிக்கும் ஒரு திரைக் களத்தில் இந்த படம் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ளது. வரும் மே 16ம் தேதி மாமன் படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இந்த மாமன் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சூரி, தனது அக்காவின் குழந்தை மீது காட்டும் பாசம், அன்பை பல காட்சிகளில் இயக்குனர் பிரசாந்பாண்டியராஜ் அழகாக காட்சிப்படுத்தி கூறியிருக்கிறார். பெத்தாரே என தனது அக்கா மகனை அழைக்கும் சூரியின் குரலில் வெளிப்படும் அன்பும் அவர் காட்டும் பாசமும் இந்த படம் நிச்சயமாக ரசிகர்களின் மனம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன் படத்தின் டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்யவும்;https://youtu.be/RFxRhOVGp4U?si=Y4PtqC4nfyRgFZVy

- Advertisement -

சற்று முன்