சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய நான்கு திரைப்படங்களில் நடித்த அஜித் குமார், அடுத்ததாக ஹெச் வினோத்துடன் சேர்ந்தார். இவர்களது கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.
இதன் பிறகு அஜித்தின் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. விக்னேஷ் சிவன் இயக்க இருந்த இந்த திரைப்படம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. அவருக்கு பதில், மகிழ் திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டார். மே ஒன்றாம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகி, படத்திற்கும் விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் இந்தத் திரைப்படத்திலும் வி சென்டிமென்ட் தானா என்ன உச்சு கொட்டிய அஜித் ரசிகர்கள், ஆரம்பத்திலேயே அதிருப்தி அடைந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, விடாமுயற்சி குறித்த அப்டேட் எதுவும் மாத கணக்கில் வெளியாகாமலே இருந்தது.
வலிமை திரைப்படத்திலாவது, சூட்டிங் பணிகள் எல்லாம் நடைபெற்று அதன் பிறகுதான் அப்டேட் வெளியாகாமல் இருந்தது. ஆனால் இதில் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருப்பதாகவும், இது எங்கு போய் முடியும் என்றும் கேள்விகள் என ஆரம்பித்தன. அஜித் பைக் டூர் சென்று இருப்பதால்தான், தாமதத்திற்கு காரணம் என பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் அஜித், திரிஷா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், பைக் டூரில் ஆர்வம் செலுத்தி வரும் அஜித்குமாரின் கம்பெனி குறித்த தகவலை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா நேற்று லியோ ட்ரெய்லர் வெளியாகும் சமயத்தில் வெளியிட்டார்.
அதில், வீனஸ் பைக் டூர் என்ற நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கி இருப்பதாகவும், இதில் அனுப்பும் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலின்படி டூர்கள் அமைத்து தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வரும் 23ஆம் தேதி இதன் முதல் டூர் தொடங்க இருக்கிறதாம். இதில் ராஜஸ்தான் மற்றும் அரபு நாடுகள் தாய்லாந்து நியூசிலாந்தில் பைக் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைப்படி பைக் டூர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் ஏன் லியோ ட்ரெய்லர் வெளியாகும் போது அறிவிக்கப்பட்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





