நடிகை சினேகா சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும் சினேகாவின் நடிப்பும், அழகும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து விஜய், சூர்யா, விக்ரம், கமல் ஹாசன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்தார். ஒருகட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.மேலும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கப்போகும் புதிய படத்தில் நடிக்க சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் ஒத்துக்கொண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகையாள செய்யாறு பாலு சினேகா குறித்து பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.
அவர் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பண்ருட்டிதான் சினேகாவின் சொந்த ஊர். அவரது தந்தை திருமண மண்டபம் வைத்திருக்கிறார். இருந்தலௌம் துபாயில் செட்டிலாகிவிட்டார். அதனால் அங்கு படித்தவர்தான் சினேகா. தமிழ்நாடுதான் அவரது பூர்வீகம் என்பதால் நன்றாக தமிழ் பேசக்கூடிஅய்வர் அவர். அந்த சமயத்தில்தான் சுசி கணேசனின் விரும்புகிறேன் படத்தில் நடிக்க கமிட்டானார். வார பத்திரிகையில் வந்த விளம்பரத்தை பார்த்து சினேகா புகைப்படம் அனுப்பி பிறகு செலக்ட் ஆனார்.
அவர் தனது முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கினார். அதாவது இயக்குநர் பாம்புகள் நிறைந்த கிணற்றில் என்னை பாதுகாப்பு எதுவும் இல்லாமல் இறக்கவிட்டுவிட்டார் என்று புகார் தெரிவித்தார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சுசி கிணற்றில் இருக்கும் அந்தக் காட்சிதான் படத்துக்கு முக்கியமான சீன். அதில் பாம்புகள் எதுவும் இல்லை என்றார். சர்ச்சையில் சிக்கினாலும் முதல் படத்துக்கு பிறகு நல்ல பெயர் கிடைத்தது.
சினேகா எந்த அளவுக்கு பிரபலம் ஆனாரோ அதே அளவுக்கு கிசுகிசுவிலும் சிக்கினார். ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்துகொள்ளப்போவதாக இவரை பற்றி கிசுகிசு பரவியது. பல ஏற்றத்தாழ்வுகளை, சர்ச்சைகளை அவர் தனது திரை வாழ்க்கையில் சந்தித்தவர். புதுப்பேட்டையில் இவர் நடிக்க ஒத்துக்கொண்டார். ஆனால் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே ஏன் இதில் நடிக்க ஒத்துக்கொண்டே என்று அழுதார். உடனே தனுஷ் அவரிடம் இது கண்டிப்பாக நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று சொல்லி ஆறுதல் கூறினார்” என்றார்.





