- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் நெஞ்சுக்குள் அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்கவிட்டேன்.. ஃபகத் பாசிலுக்கு மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து

உங்கள் நெஞ்சுக்குள் அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்கவிட்டேன்.. ஃபகத் பாசிலுக்கு மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து

- Advertisement -

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் ஃபகத் பாசில். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று அலட்டல் இல்லாத நடிப்பை வழங்கக்கூடியவர். குறிப்பாக கண்களால் நடிக்கும் நடிகர்கள் குறைந்துவரும் சூழலில் அந்தத் தன்னையை ஃபகத் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாகவும் அவரது நடிப்பு பரவலாக ரசிக்கும்படி இருக்கிறது.

ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி ஃபகத் பாசிலுக்கு பெண் ரசிகைகளும் அதிகம். அவர் எங்கள் க்ர்ஷ என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் சொல்லிவருகின்றனர் பெண்கள். ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் அவர் எப்போது எங்கள் க்ரஷ் மெட்டீரியல்தான் என ஆணித்தரமாக கூறிவருகிறார்கள். மலையாளத்தில் ஹீரோவாக கலக்கும் அவர் தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரிலும், வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்கிவருகிறார்.

- Advertisement -

அவரது நடிப்பில் சமீபத்தி மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியானது. சாதி வெறி பிடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் மிரட்டியிருந்தார். அதனைப் பார்த்த பலரும் மாமன்னன் அவரது கரியர் பெஸ்ட் என்று கூறினார்கள். இந்தச் சூழலில் அவர் இன்று தனது ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையோடி மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், “வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

- Advertisement -

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்” என குறிப்பிட்டுள்ளார்.

ஃபகத் பாசில் அடுத்ததாக ரஜினிகாந்த்தும், ஞானவேலுவும் இணையும் படத்தில் வில்லனாக நடிக்கலாம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி நடக்கும்பட்சத்தில் ஸ்க்ரீனில் ரஜினிக்கு ஃபகத் டஃப் கொடுத்து ஸ்கோர் செய்வாரா என்பதை பார்க்க பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்