நடிகர் அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடியும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிக்கும் படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி. இந்த படத்தின் படப்பிடிப்புக்கான ப்ரீ புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பதில் ஆரம்பத்திலிருந்து ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். ரஜினி கமல் விஜய் அஜித் என்ற வரிசையில் மிக முக்கியமாக இடத்தில் உள்ளார்.
அந்த வகையில் இப்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். அதேபோல் நயன்தாரா, ஹூமா குரேஷி, போன்ற கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் அஜித்குமார் தனது வயதுக்கேற்ற வகையில் கேரக்டர்களையும், அதேபோல் தனது வயதுக்கேற்ற வகையில் ஹீரோயின்களையும் தன் படங்களில் கமிட் செய்ய வேண்டும் என்பதை ஒரு கண்டிப்பான உத்தரவாகவே போட்டு இருக்கிறார்.
ஏனெனில் சில கதாநாயகர்கள் உதாரணமாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்கள் தன்னைவிட 30, 35 வயது குறைந்த பெண்களுடன் ஹீரோயின்களாக டான்ஸ் ஆடுவதை பார்க்கவே, ரசிகர்கள் சகிப்பதில்லை. வயதான முதியவருடன் இளம்பெண்கள் டான்ஸ் ஆடுவது போல்தான் இருக்கிறது என்று என்று நினைக்கின்றனர். இது தமிழ் சினிமாவில் ஒரு சாபக்கேடாக இருந்து வருகிறது.
இப்போது அநியாயத்துக்கு ஒரு ஹீரோவுக்கு வயது 60, 70 என்று இருக்கும்போது 25 வயது நாயகி நடிப்பது ரசிகர்கள் பார்க்கும் போது மிகவும் ஜோடிப் பொருத்தமாக இருப்பதில்லை. அதனால் அஜித் இப்படி ஒரு முடிவெடுத்து, தனது வயதுக்கேற்ற வகையில் நடிகைகள் ஹீரோயின்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அதனால்தான் திரிஷா, நயன்தாரா, ஹூமா குரேஷி போன்றவர்கள் நடிக்கும் போது, வயது மூத்த நடிகைகளாக இருப்பது ஜோடிப் பொருத்தமாக இருக்கிறது.
ஆனால் இப்போது குண்டூர்காரம் படத்தில் நடித்த ஸ்ரீ லீலா, அஜீத் நடிக்கும் படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இவருக்கு 22 வயசுதான் ஆகிறது. அதனால் வயதுக்கேற்ற தோற்றம் கேரக்டருக்கான தோற்றம் இவர் இல்லாத நிலையில், அஜித் படத்தில் கமிட்டாகி உள்ளார், ஆனால் கதாநாயகியாக நடிக்கிறாரா அல்லது மற்ற ஏதேனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரா என்பது பின்னர்தான் தெரிய வரும்.





