தமிழக சட்டசபையில் பேசினாலும் திருச்சியில் பேசினாலும் நேற்று கரூரில் பேசும் போதும் திமுக குறித்து விமர்சிப்பதையே தனது வழக்கமாக கொண்டிருக்கிறார் தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய். வெறுப்பு அரசியலை தேர்தல் பிரசாரத்தின் போதும் தேர்தலுக்கு பிறகு இப்போதும் அவர் நடத்துவது வெளிப்படையாகவே தெரிகிறது.
தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகும் மீண்டும் மீண்டும் திமுக ஆட்சியை திமுக ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேடுகளை குறைகளை குளறுபடிகளை சுட்டிக் காட்டுவதில் மட்டுமே தவெக கட்சியின் தலைவரான முதல்வர் விஜயும் தவெக அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் முனைப்பாக இருந்து வருகின்றனர். அதையே ஒரு முக்கிய விஷயமாக பேசுகின்றனர்.
அது மக்களுக்கே தெரிந்துதான் திமுகவும் வேண்டாம் அதிமுகவும் வேண்டாம் என்று தவெக கட்சியை தேர்வு செய்து விசில் சின்னத்துக்கு வாக்களித்து 108 இடங்களில் அபார வெற்றியை தந்துள்ளனர். ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக மோசம் திமுக மோசம் என்று பேசுவதை முதல்வர் விஜய் விட்டு விட்டு அடுத்து அவரது ஆட்சிக்கான பணிகளை மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று தவெக தொண்டர்களே வெளிப்படையாக விரும்புகின்றனர்.
இந்நிலையில் நேற்று கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசும் போது வழக்கம் போல திமுகவை வசை பாடுவதையே தனது பேச்சின் பெரும்பகுதியை வைத்திருந்தார். இதுகுறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தவெகவை துறைமுகம் தொகுதியில் தூள் பக்கோடா போட்டு சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம் போட்டதே திமுக.
அதைப்பற்றி பேச மாட்டீர்களா? 234 தொகுதிகளில் 126 தோல்வி அடைந்தீர்களே? அங்கே மக்கள் தவெகவுக்கு போட்டதும் கொத்து பரோட்டா தானே? பாலியல் வன்கொடுமை மின்வெட்டு பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு அதிகாரம் ஜல்ஜீவன் திட்டத்தில் கையெழுத்து இந்த பிரச்சனைகளை தாய் மாமர் தாய் மாமன் தீர்ப்பாரா?
உங்கள் கொள்கை எதிரி பாஜகவை வெளுத்து விட வேண்டாமா? அதை பற்றி ஏன் பேசுவதே இல்லை? உங்கள் கொள்கை தலைவர் பெரியார் இதைத்தான் விரும்புவாரா? என்று தனது எக்ஸ் பதிவில் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி இருக்கிறார். தோல்வியடைந்தவர்களை கேவலமாக விமர்சிப்பது நல்ல தலைவனுக்கு அழகல்ல, அது ஒரு நல்ல பண்பும் அல்ல என்று ஒரு படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பேசிய வசனத்தை தவெகவினர் நினைவில் கொள்வது நல்லது.





