- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து தரமான சம்பவங்களை செய்து வரும் முதல்வர் விஜய் - முதல் ஆக்சனே வேற லெவலா...

அடுத்தடுத்து தரமான சம்பவங்களை செய்து வரும் முதல்வர் விஜய் – முதல் ஆக்சனே வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கிய விஜய் 27 மாதங்களில் தமிழக முதல்வராக அரியணையில் அமர்ந்திருக்கிறார். அதுவும் 75 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட திமுக 55 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட அதிமுக கட்சிகளை பல தொகுதிகளில் டிபாசிட் இழக்க செய்திருக்கிறார்.

கட்சித் தலைவராக விஜய் தேர்தல் பிரசாரங்களின் போது திமுக குறித்து மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அன்றைய முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக பேசினார். ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவர் யாருமே எதிர்பார்க்காத தரமான சம்பவங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 10ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தலைமை செயலகம் சென்ற விஜய், அதன்பிறகு வேப்பேரியில் உள்ள திராவிடர் கழகம் தலைவர் வீரமணியை நேரில் சென்று முதல்வர் விஜய் சந்தித்து ஆசி பெற்றார். அங்கு இருந்த பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு நேற்று சட்டசபை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக உறுதிமொழி வாசித்து பொறுப்பேற்றார். மற்ற கட்சி உறுப்பினர்களும் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதன்பிறகு யாரும் எதிர்பாராத வகையில் திமுக தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கே முதல்வர் விஜய் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

- Advertisement -

அப்போது வீட்டு வாசலில் காத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை கட்டித்தழுவி வரவேற்றார். பிறகு முதல்வர் விஜய் – ஸ்டாலின் சந்திப்பை தொடர்ந்து அடுத்து மதிமுக செயலாளர் வைகோ வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜய் அங்கும் ஆசி பெற்றார். அப்போது வைகோ மகன் துரை வைகோ உள்ளிட்ட குடும்பத்தினரும் விஜயை வரவேற்றனர்.

அதன்பிறகு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இல்லங்களுக்கும் நேரில் சென்று முதல்வர் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் ஆகியோரை முதல்வர் விஜய் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கோவில்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் 717 கடைகளை அகற்றுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்