- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்களே அந்த நாடகத்தை நடத்திவிட்டு என் மீது பழி போடுவதா? - கரூரில் பேசிய ...

நீங்களே அந்த நாடகத்தை நடத்திவிட்டு என் மீது பழி போடுவதா? – கரூரில் பேசிய முதல்வர் விஜய் திமுக மீது பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் 41 பேர் நெரிசலில் சிக்கி பலியாகினர். அந்த சம்பவத்துக்கு பிறகு இன்று தமிழக முதல்வர் விஜய் கரூருக்கு நேரில் வருகை தந்தார். அப்போது வழக்கமான தனது வாகனத்தின் மீது ஏறி நின்று பேசிய முதல்வர் விஜய், கரூரில் நடந்த அந்த சம்பவம் குறித்து திமுக மீது பகிரங்கமாக குற்றம் சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில வலிகளையும் காயங்களையும் மறக்க முடியாது. அப்படித்தான் என் வாழ்வில் கரூர் சம்பவம் அதிக வலி தருவதாக இன்றும் என் மனதில் உள்ளது.

- Advertisement -

அன்று நான் கரூர் வந்தபோது எதிர்பார்த்ததை விடவும் கூட்டம் அதிகமாக உள்ளது என்று காவல்துறையினர் சொல்லி இருக்கலாம் அல்லவா? அந்த கூட்டத்தையே கூட ரத்து செய்யும் ரைட்ஸ் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை போலீஸ் செய்யவில்லை. நெடுஞ்சாலையில் இருந்து போலீசாரே அழைத்து வந்த இந்த நாடகத்தை நான் நம்பிவிட்டேன்.

டிவி திரையில் எனது படப் பாடலைப் பார்த்து முத்தம் கொடுத்த எனது சகோதரியின் பிள்ளைகளை இழந்துள்ளோம். வலியுடன் வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்து விட்டான் என்று சொல்வீங்களா? வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா? வலியுடன் உள்ள என்னை ஏளனமாக பேசி என் மீது பழி போடுவதா? சட்டசபையில் ஸ்டாலின் சார் நம்ம மேல் அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்தது என்ன நியாயம்?

- Advertisement -

எனக்கு வலி தந்த அனைவருக்கும் 2026 தேர்தலில் தக்க பதிலடி மக்கள் கொடுத்துள்ளார்கள். மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவே நான் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன். காலத்திற்கும் அவர்கள் எழுந்து விடாத வகையில் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்துள்ளீர்கள். பணமா ஜனமா என்றால் எனக்கு எப்போதும் ஜனம் தான் முக்கியம். உங்களை விட காசு பணம் முக்கியமா என்ன?

இதுபோல் அவர்களால் சொல்ல முடியுமா? கட்சி நிதி என்று சொன்ன உடனேயே சட்டசபையில் இருந்து எழுந்து ஓடினார்களே எப்படி தெரியுமா? ஓடு ஓடு ஓடு ஓடு வாரான் பாரு வேட்டைக்காரன் என்று ஓடியே விட்டார்கள். அரசு அலுவலகங்களில் ஊழலின்றி வேலை தொடர்ந்து நடக்கிறது. லஞ்சம் வாங்காதது மட்டுமின்றி மரியாதையாக பேசுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள் என்று முதல்வர் விஜய் கரூர் கூட்டத்தில் திமுக குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்