- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அந்த வாய்ப்பு பலமுறை வந்தது, ஆனால் நான் நிராகரித்து விட்டேன் - சின்னக்குயில் சித்ரா...

எனக்கு அந்த வாய்ப்பு பலமுறை வந்தது, ஆனால் நான் நிராகரித்து விட்டேன் – சின்னக்குயில் சித்ரா ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னக்குயில் என்று அழைக்கப்படுபவர் பின்னணி பாடகி சித்ரா. கடந்த 47 ஆண்டுகளில் தமிழ் மலையாளம் தெலுங்கு என பல மொழிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். எஸ்பி பாலசுப்ரமணியம் கே ஜே ஜேசுதாஸ் மனோ என முன்னணி பாடகர்களுடன் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

அத்துடன் இளையராஜா தேவா ஏஆர் ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பல்வேறு மாநிலங்களில் பிற நாடுகளில் நடத்திய இசைக்கச்சேரிகளிலும் சின்னக்குயில் சித்ரா பங்கேற்று பாடியிருக்கிறார். இப்போது முதன்முறையாக பாடகி சித்ராவே இசைக்கச்சேரி நடத்துகிறார்.

- Advertisement -

சென்னையில், நந்தனம் பகுதியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் கேஎஸ் சித்ரா லைவ் இன் கான்செர்ட் என்ற பெயரில் வருகிற 8ம் தேதி சனிக்கிழமை மாலை இந்த இசைக் கச்சேரி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பாடகி சித்ரா கூறியதாவது, இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன். இந்த நிகழ்ச்சியை 3 மணி நேரம் ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம். என்னுடன் நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாட உள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களை தேர்வு செய்து பாட இருக்கிறோம்.

- Advertisement -

இன்றைய பாடல்களில் இசையின் சத்தம் அதிகமாகவும் வார்த்தைகள் குறைவாக இருப்பதாகவும் கூறுகின்றனர். காலத்திற்கேற்ப இசையிலும் மாறுதல் வர தான் செய்யும். அதை நாம் ஏற்றுக் கொண்டு பயணிக்க வேண்டும். இது குறித்து விமர்சிக்க தேவையில்லை. இன்று பல இளம் பாடகிகள் மிகவும் நன்றாக பாடுகிறார்கள். அவர்களை பார்த்து நான் வியந்திருக்கிறேன். கே ஜே ஜேசுதாஸ் அண்ணன் கரம் பிடித்து இசைத்துறைக்கு வந்தேன். இளையராஜா தான் என்னை ஆளாக்கினார். ரசிகர்கள் ஆதரவு தந்தனர்.

இன்றைய இளம் பாடகிகள் சிலர் சினிமாவின் நடிப்பது போல் நான் ஏன் நடிக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். எனக்கும் சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை. எல்லா பாடல்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை தான் தருகிறேன். வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் பாடுகிறேன். ஆனாலும் சில பாடல்கள் மக்களிடம் சரியாக சென்று சேராதது வருத்தமாக இருக்கும். நான் பாடிய எல்லா பாடல்களையும் ஒரே மாதிரியாகத்தான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்