- Advertisement -
Homeபொழுதுபோக்குகோபத்தில் கொந்தளித்த நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, பதில் சொல்லாமல் மவுனம் காக்கும் தனுஷ் -...

கோபத்தில் கொந்தளித்த நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, பதில் சொல்லாமல் மவுனம் காக்கும் தனுஷ் – அதுகுறித்து கஸ்தூரி ராஜா தந்த சூப்பர் விளக்கம்!

- Advertisement -

கடந்த 2 தினங்களாக இணையத்தில் கங்குவா படம் குறித்த விமர்சனங்கள் வைரலான நிலையில் நேற்று திடீரென நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து வெளியிட்ட அறிக்கை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் நடிகர் தனுஷ்.

அதனால் கோபத்தில் கொந்தளித்த நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இவ்வளவு கீழ்த்தரமான செயலை செய்த நீங்கள், உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன்னால் ஏமாற்றி நடித்துக்கொண்டே இருக்கிறீர்கள். 2 ஆண்டுகளாக எங்களது திருமண விழா வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகததற்கு தனுஷ்தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த விவகாரத்தில் நடிகை நயன்தாராவுக்கு சில நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல் ஒரு தயாரிப்பாளராக நடிகர் தனுஷ், நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுத்த காட்சிகளை, அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு ரூ. 10 கோடி கேட்டது தப்பில்லை என்றும் கூறுகின்றனர்.

பொதுவாக பல லட்சங்களை, கோடிகளை செலவு செய்து பலரும் திருமணம் செய்கின்றனர். பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் அந்த திருமணத்தையே ரூ. 80 கோடிக்கு விற்பனை செய்துள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருமே பயங்கரமான வியாபாரிகள். அதனால் ரூ. 10 கோடி அவர்களிடம் தயாரிப்பாளர் தனுஷ் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனுஷ் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதுபற்றி தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறியதாவது, இந்த தகவல் எனக்கு மிகவும் தாமதமாகத்தான் தெரிந்தது. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வேலை தான் முக்கியம். எங்களுக்கு பின்னால் துரத்துபவர்களையோ, பின்னால் பேசுவார்கள் பற்றியோ சிந்திக்கவும் பதில் கொடுக்கவோ நேரம் இல்லை.

என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துவார். இப்போது இட்லி கடை படப்பிடிப்பு வேலையில் பிஸியாக இருக்கிறார். எனக்கு தெரிந்து நயன்தாரா சொன்னது போல் 2 ஆண்டுகளாக காத்திருந்தது என்பதெல்லாம் உண்மையான செய்தி அல்ல. இதைப்பற்றி பேச வேண்டாம் என்றுதான் நான் தவிர்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்