- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் ராம் இயக்கும் புதிய படம் - எட்டு மணி நேரம் பாட்டு பாடிய பிரபல...

இயக்குநர் ராம் இயக்கும் புதிய படம் – எட்டு மணி நேரம் பாட்டு பாடிய பிரபல நடிகர் – அதுக்கு சம்பளமே வாங்கலையாமே?

- Advertisement -

இயக்குநர் ராம் சிறந்த படைப்பாளியாக தன்னை பல படங்களில் வெளிப்படுத்தியவர். கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இதுவரை 4 படங்களே இயக்கியிருந்தாலும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் படைக்கப்பட்டிருந்தன.

இயக்குநர் ராம், சவரக்கத்தி என்ற படத்தில் சலூன்கடை பார்பர் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் மிஷ்கின், சொர்ணா நடித்திருந்தனர். காமெடி படமான இதில், ராம் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதே போல் ரவுடியாக வரும் மிஷ்கின் காட்டும் கோபமும், ஆவேசமும், அவரது அடியாட்களை அடிக்கும் ஆத்திரமும் சிரிப்பையே வரவழைக்கும்.

- Advertisement -

இப்போது இயக்குநர் ராம், ஏழு கடல் ஏழுமலை என்ற படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்துக்கான பாடல் ஒலிப்பதிவு சமீபத்தில் நடந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய பாடலை பாட நடிகர் சித்தார்த், ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.

இந்த பாடல் பதிவு சரியாக இரவு 8 மணிக்கு துவங்கிய நிலையில், மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஒலிப்பதிவு நீடித்திருக்கிறது. படத்தின் இயக்குநர் ராம் ஒருபுறம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒருபுறம் என பார்த்து, பார்த்து இழைத்து இழைத்து இந்த பாடலை, சித்தார்த் குரலில் உருவாக்கி உள்ளனர்.

- Advertisement -

ஒரு தொழில்முறை பாடகரே பாட முடியாத அளவுக்கு இந்த பாட்டை மிகச் சிறப்பாக பாடி இருக்கிறார் சித்தார்த் என அந்த பாடலை கேட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியான அயலான் படத்தில், ஏலியன் குரலாக ஒலித்ததும் நடிகர் சித்தார்த் குரல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏழுகடல் ஏழுமலை படத்தில் பாடல் பாடியதற்காக சம்பளம் எதுவும் பெறவில்லை சித்தார்த். அதே போல் இந்த படத்துக்காக பாடிய ஆண்ட்ரியா, சந்தோஷ் நாராயணனும் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் யுவன் சங்கர் ராஜா மொத்தமாக, பேக்கேஜ் ஆக இதற்கான மொத்த தொகையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பெற்று விடுவார். பாடகர்கள் சம்பளம் வாங்க மறந்தாலும், மறுத்தாலும் இசையமைப்பாளருக்கு அது லாபம்தான் என, சமூகவலைதளத்தில், சினிமா விமர்சகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்