- Advertisement -
Homeபொழுதுபோக்குகிப்ட் தருவதாக சொல்லி, நடிகை சில்க் ஸ்மிதாவை, பெண்டு கழட்டி விட்டேன் - பல...

கிப்ட் தருவதாக சொல்லி, நடிகை சில்க் ஸ்மிதாவை, பெண்டு கழட்டி விட்டேன் – பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன சினிமா பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமாவில், 1980, 90களில் சில்க் ஸ்மிதா காலம் என்று ஒன்று இருந்தது. யார் நடித்த படமாக இருந்தாலும் சில்க் ஸ்மிதா நடித்த பாடல் காட்சி அதில் இடம்பெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. அந்த வகையில், சில்க் ஸ்மிதா நடனம் பார்ப்பதற்காகவே, ரசிகர் கூட்டம் தியேட்டர்களை மொய்த்தது.

வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம், நடிகர் வினுசக்ரவர்த்தி தான், சில்க் ஸ்மிதாவை, தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற கேரக்டரில் அவர் நடித்ததால், அந்த பெயரே சினிமாவில் நிலைத்துவிட்டது.

- Advertisement -

இப்போதும் சில்க் ஸ்மிதா என்றால், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துதான் போகிறது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில், சில்க் ஸ்மிதா போன்ற முகச்சாயலில் இருந்த புதுமுக நடிகைக்கு கிடைத்த வரவேற்பும், விசில் சத்தமும் தியேட்டர்களை ரணகளப்படுத்தியது.

சில்க் ஸ்மிதா குறித்த சில சுவாரசியமான தகவல்களை, சினிமா டான்ஸ் மாஸ்டர் ஒருவர் இப்போது கூறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. சில்க் ஸ்மிதாவுக்கு டான்ஸ் வராது என்பது பல பேருக்கு தெரியாது. குறிப்பாக, பாடல் காட்சிகளில் முகபாவனை காட்ட மிகவும் சிரமப்படுவார்.

- Advertisement -

சகலகலா வல்லவன் படத்தில், நேத்து ராத்திரி யம்மா பாடலில், அந்த யம்மா வார்த்தையை பாடும்போது, சில்க் ஸ்மிதா கிறக்கமான முகபாவனை காட்டவில்லை. அதனால், கேமராவுக்கு பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு, அவர் யம்மா என பாடும் முன், வயித்தை பிடித்து கிள்ளினேன். அந்த வலியால் அவர் யம்மா என்ற முகபாவனையை காட்டினார்.

அந்த பாடல் காட்சி துவங்கும் முன்பே, இன்று சில்க் நடனமாட வருகிறார், எப்படி சமாளிக்க போறீங்க என, கமல் என்னை கிண்டலடித்தார். ஆனால், சில்க் ஸ்மிதாவிடம், நான் சொன்னபடி இன்று நீ டேன்ஸ் ஆடினால் உனக்கு லஞ்ச் நேரத்தில், உனக்கு பிடித்த ஒரு கிப்ட் தருகிறேன் என்று சொல்லி, அவரை அன்று பெண்டு கழட்டி விட்டேன்.

உன் கண்கள், உதடுகள், உடல்வாகு எல்லாமே மிக அழகாக உள்ளது. இப்படி எல்லோருக்குமே அமையாது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள். ஒரு டான்ஸ் மாஸ்டராக உனக்கு அதற்கு நான் எப்போதும் உதவியாக இருப்பேன் என, அடிக்கடி சொல்லி இருக்கிறேன். என்று மனம் திறந்து கூறி இருக்கிறார் பிரபல டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா.

- Advertisement -

சற்று முன்