- Advertisement -
Homeபொழுதுபோக்குகிடுக்கிப்பிடி நிபந்தனைகளால் சிவகார்த்திகேயனை அப்செட் செய்த தயாரிப்பாளர் - குறித்த தேதியில் சிபி சக்ரவர்த்தி படம்...

கிடுக்கிப்பிடி நிபந்தனைகளால் சிவகார்த்திகேயனை அப்செட் செய்த தயாரிப்பாளர் – குறித்த தேதியில் சிபி சக்ரவர்த்தி படம் ஷூட்டிங் துவங்குமா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நட்சத்திர நடிகர்கள் வரிசையில் இருக்கிறார். அமரன் படத்தை போலவே பராசக்தி படமும் மிகப்பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 10ம் தேதி பராசக்தி படம் திரைக்கு வர உள்ளது. இதில் ரவி மோகன் அதர்வா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

பராசக்தி படத்துக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன், டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பாளர் சுதன் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு கோல்ட் மைண்ட் மணீஷ் என்பவர்தான் பைனான்ஸ் செய்கிறார். அதனால் இந்த படத்தில் அவரும் ஒரு இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பைனான்சியர் கோல்ட் மைண்ட் மணீஷ் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை அவர் விதித்திருக்கிறார். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த ஒரு படத்திலும் இப்படிப்பட்ட நிபந்தனைகளை யாரும் போடவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு பல நிபந்தனைகளை அவர் போட்டுள்ள நிலையில், தனது முந்தைய படங்களின் நிபந்தனைகளுக்கும் இதற்கும் நிறைய வித்யாசங்களும் முரண்பாடுகளும் இருப்பதால் அந்த ஒப்பந்தத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை கையொப்பம் இடாமல் இருந்து வருகிறார். ஏனெனில் இதனால் பல சிக்கல்களை அவர் பிறகு சந்திக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

வருகிற ஜனவரி 19ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் இன்னும் நிபந்தனைகளுக்கு ஓகே சொல்லாததால் படப்பிடிப்பு துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரை அந்த நிபந்தனைகளை ஏற்க நடிகர் சிவகார்த்திகேயன் தயாராக இல்லை. அதனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் அவர் தாமதித்து வருகிறார்.

அதனால் இந்த பிரச்னையில் இன்னும் ஓரிரு தினங்களில் தீர்வு எட்டப்படாத பட்சத்தில் வேறு ஒரு தயாரிப்பாளரை அணுகி படத்தின் பைனான்ஸ் பிரச்னைகளை சமாளித்துக்கொள்ள தயாரிப்பாளர் சுதன் முடிவு செய்துள்ளார். அதனால் இந்த படத்தில் இருந்து கோல்ட் மைண்ட் மணீஷை விலகவும் அதிக வாய்ப்புள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்