- Advertisement -
Homeபொழுதுபோக்குபரதேசி கல்லூரி ஜோக்கர் படங்களின் ஒளிப்பதிவாளர் செழியன் திடீர் மறைவு - திரை பிரபலங்களின் தொடர்...

பரதேசி கல்லூரி ஜோக்கர் படங்களின் ஒளிப்பதிவாளர் செழியன் திடீர் மறைவு – திரை பிரபலங்களின் தொடர் மறைவால் துக்கத்தில் தவிக்கும் தமிழ் சினிமா!

- Advertisement -

சமீபத்தில்தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைக்கதை மன்னர் இயக்குனர் கே பாக்யராஜ் அடுத்தடுத்து மறைந்தனர். இரண்டு ராஜாக்களை அடுத்தடுத்து ஒரே மாதத்தில் இழந்து விட்டோம் என்று நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் இன்று காலை திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் மறைந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர் செழியன். இவர் சிவகங்கை சேர்ந்தவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பல படங்களில் பணி செய்தார். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் ஒளிப்பதிவாளராக செழியன் அறிமுகமானார்.

- Advertisement -

தொடர்ந்து இயக்குனர் பாலாவின் பரதேசி தாரை தப்பட்டை ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணி செய்தார். தொடர்ந்து சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் பாலச்சந்தர் பாரதிராஜா இணைந்து நடித்த ரெட்டைச் சுழி உள்ளிட்ட படங்களுக்கு செழியன்தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டூலெட் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் செழியன் அறிமுகமானார். இந்த படத்துக்கு அவரே ஒளிப்பதிவாளராகவும் செயல்பட்டார். டூலெட் படம் தேசிய விருது பெற்றது. யதார்த்த படைப்புகளை காட்சிகள் வாயிலாகவும் கதை சொல்லலிலும் பிரபலமானவர் செழியன். புதிய படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வந்தார். இதில் பயின்ற 34 பேர் ஒரே நேரத்தில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றனர் என்பது குறிப்பிடப்பட்டது.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோரை பற்றி ஏ லிட்டில் ட்ரீம், திருவிழா ஆகிய குறும்படங்களையும் செழியன் இயக்கியுள்ளார். செழியன் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல. எழுத்தாளரும் கூட. சினிமா தொடர்பாக உலக சினிமா புத்தகம் ஒன்றையும் செழியன் எழுதியுள்ளார். செழியன் சம்பள விஷயத்தில் கறாராக இருக்க மாட்டார். அதனால் செழியன் பல படங்களிலும் சம்பளம் வாங்காமலும் பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் செழியன் திடீரென உடல் நலக்குறைவால் மறைந்தது தமிழ் சினிமா துறையினரையும் ரசிகர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. செழியனின் உடல் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ் அடுத்தடுத்து மறைந்தனர். இப்போது செழியனின் திடீர் மறைவும் தமிழ் சினிமா துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்