இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சித்தார்த். பிறகு ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் சித்தார்த் நடிகராக அறிமுகமானார். இதில் ஜெனிலியா நாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் பரத் நகுல் மணிகண்டன் தமன் உள்ளிட்டோரும் அறிமுகமாகி நடித்திருந்தனர்.
பாய்ஸ் படத்தில் விவேக் இளவரசு செந்தில் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சாலமன் பாப்பையா படத்தின் இறுதி காட்சியில் நீதிபதியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த அனைவருமே இப்போது நடிகர்களாக உள்ளனர். இதில் நடிகர் தமன் முன்னணி இசையமைப்பாளராக தெலுங்கில் இருந்து வருகிறார். மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார்.
இதில் நடிகர் நகுல், நடிகை தேவயானியின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் பிறகு பல படங்களில் நாயகனாக நடித்தார். குறிப்பாக சித்தா அருவம் அரண்மனை 2 இந்தியன் 2 ஆயுத எழுத்து தீயா வேலை செய்யணும் குமாரு ஜிகர்தண்டா காவியத்தலைவன் சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களில் சித்தார்த் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான மிஸ் யூ மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான டெஸ்ட் என்ற படங்களிலும் சித்தார்த் நடிப்பு வரவேற்பை பெற்றது. ஆனால் சித்தார்த் நல்ல நடிகராக இருந்தும் பெரிய அளவில் முன்னணி நடிகராக அவர் சிறப்பு இடத்தை பிடிக்கவில்லை. அதே நேரத்தில் அவருக்கு ஒரு கனவும் இருக்கிறது.
இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன் இருவரும்தான் தன் சினிமா குரு என்று தொடர்ந்து கூறிவரும் நடிகர் சித்தார்த்துக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசை இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான். சில படங்களை தயாரித்த அவர் விரைவில் இயக்குனர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நடிகர் சித்தார்த் சமீபத்தில் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து சித்தார்த் கூறியதாவது, ஒரு படம் இயக்கி அதை மணிரத்னம் சாரிடமும் கமல் சாரிடமும் போட்டு காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இயக்குனர் ஆவதற்காக வந்தவன் நடிகன் ஆகி விட்டேன். இப்போது உடனே படம் இயக்குவது என் கையில் இல்லை. இன்னும் அது கனவாகவே இருக்கிறது. எப்போது அது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த கனவில் இருந்து இன்னும் பின்வாங்காமல் இருக்கிறேன் என்று சித்தார்த் கூறியிருக்கிறார்.





