- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் ஒருவருக்கு உதவினால் அதில் சுயநலம்தான் நிறைய இருக்கும், அவரை போன்ற மோசமான மனிதர் கிடையாது...

அஜீத் ஒருவருக்கு உதவினால் அதில் சுயநலம்தான் நிறைய இருக்கும், அவரை போன்ற மோசமான மனிதர் கிடையாது – விளாசித் தள்ளிய காமெடி நடிகர்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக, டாப்பில் இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார்தான் இப்போதைக்கு உச்ச நடிகர்களாக இருக்கின்றனர். இதில் அதிக விமர்சனங்களில் சிக்கிக் கொள்பவர் நடிகர் அஜீத்குமார்தான். விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வரவில்லை, நான்குவரி இரங்கல் கூட அஜீத்குமார் தெரிவிக்காதது ஏன் என பலரும் கடுமையாக விமர்ச்சித்தனர்.

ரசிகர்களை பார்த்தாலே அலர்ஜி என, அவர் வெளிப்படையாகவே கூறி வருகிறார். இதனால் நள்ளிரவு 3 மணிக்கு, விஜயகாந்த் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக அவர் கேட்ட போது, கேப்டன் குடும்பத்தினரே அதிர்ந்து போயுள்ளனர். அப்படி திருட்டுத்தனமாக நள்ளிரவு 3 மணிக்கு யாரும் வரவேண்டிய அவசியம் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் மனங்களில் கேப்டன் வாழ்கிற பெருமை போதும் என கேப்டன் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதற்கிடையே அஜீத்குமார் நிறைய பேருக்கு தெரியாமல் உதவுவார். அதை விளம்பரப்படுத்த மாட்டார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தன்னை வைத்து படம் எடுத்த எஸ்ஜே சூர்யா, சரண் போன்றவர்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். தன்னுடைய மேக்கப் மேன் உதவியாளருக்குதான் பைக் வாங்கி கொடுத்தார். கேபிஒய் பாலா போல, பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் அறிமுகம் இல்லாத ஊழியருக்கு பைக் வாங்கி தந்து உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் டெலிபோன் ராஜ். டுபாக்கூர் ஓட்டலில் சாப்பிடச் செல்லும் வடிவேல், 16 கரண்டி நெய் ஊற்றி ஊத்தப்பம் சொல்ல, சாருக்கு ஒரு ஊத்தப்பம் என்று சர்வராக சொல்லும் காமெடியில் மிக பிரபலமானவர்தான் டெலிபோன் ராஜ். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் அஜீத்குமாரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அஜீத்குமார், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே உதவி செய்வார். அதில் சுயநலம்தான் இருக்கும். ஒரு படத்தில் நடிக்க அவர் 100 கோடி ரூபாய்க்கு சம்பளம் வாங்குகிறார். அவரது படம் ஷூட்டிங்கில் லைட்மேன்கள் முதல் பல தொழிலாளர்கள் மிக கஷ்டமான வேலைகளை, செய்கின்றனர். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்தால் கூட 100 பேருக்கு அவரால் உதவ முடியும். ஆனால் இதுவரை அவர் அப்படி செய்தது இல்லை.

ஆனால் அவரை மிகவும் நல்லவர் போல, சித்தரித்து வருகின்றனர். அவரது இணைய கூலிகள் மூலமாக மீடியாக்களில் அவரை நல்லவர் போல ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கின்றனர். மக்களுக்காக, ரசிகர்களுக்காக எதுவுமே செய்யாத அவர் நல்லவர் கிடையாது. அதனால் எனக்கு அவரை எப்போதுமே பிடிக்காது என, வெளிப்படையாக பேசியிருக்கிறார் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்