- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68-ல் இணைந்த நகைச்சுவை பிரபலம்... விஜய்க்கு அப்படி ஒரு கதாபாத்திரத்தையும் வெங்கட்பிரபு வச்சிருக்காராம்...

தளபதி 68-ல் இணைந்த நகைச்சுவை பிரபலம்… விஜய்க்கு அப்படி ஒரு கதாபாத்திரத்தையும் வெங்கட்பிரபு வச்சிருக்காராம்…

- Advertisement -

இந்த வருடத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. முதன் முதலில் நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடிக்க, பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான அந்த திரைப்படம், பெரிய அளவு வசூலை ஈட்ட வில்லை. அதேபோல் விஜய்க்கும் எதிர்பார்த்த ஒரு வெற்றியையும் வாரிசு கொடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் பாதி சூப்பராக உள்ளது என்றும் இரண்டாம் பாதியில் சுமாராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது வசூலில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

கிட்டத்தட்ட லியோ திரைப்படம் 600 கோடி அளவுக்கு வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68-வது திரைப்படமாக உருவாகும் இதனை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.

இதில் ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ், மைக் மோகன், இவானா, யுகேந்திரன் என படத்தில் நடித்து வரும் பிரபலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதன் படப்பிடிப்பு டெல்லி, தாய்லாந்து நாடுகளின் நடைபெற்றது. பிறகு துருக்கி நாட்டில் நடைபெற, தற்போது ஹைதராபாத்தில் சூட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

தனது முந்தைய திரைப்படமான மாநாடு படத்தில் எப்படி டைம் லூப் என்னும் கான்செப்ட்டை வெங்கட் பிரபு வைத்தாரோ அதேபோல் இதில் டைம் டிராவல் கதையை கையில் எடுத்திருக்கிறாராம். இதில் விஜய்யை இளமையான தோற்றத்தில் காண்பிக்கவும் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். இதற்கான ஏ ஐ தொழில்நுட்பத்தின் வசதியை நாடி இருக்கும் படக்குழு சமீபத்தில் கலிபோர்னியா சென்று வந்தது.

படத்தில் விஜய் 10 முதல் 15 நிமிடங்கள் வரை இளமையான தோற்றத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவருக்கு பள்ளி மாணவர் கதாபாத்திரத்தை வெங்கட் பிரபு வைத்துள்ளாராம். இதனிடையே ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், யோகி பாபுவும் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஆச்சரியம் அடைந்துள்ள விஜய் ரசிகர்கள் இன்னும் எத்தனை பேர்தான் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்