- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படம் டீசரை பங்கம் செய்த துணை நடிகர், அதற்கு பக்கவாத்தியம் வாசித்தாரா டைரக்டர் வெங்கட்பிரபு?...

கூலி படம் டீசரை பங்கம் செய்த துணை நடிகர், அதற்கு பக்கவாத்தியம் வாசித்தாரா டைரக்டர் வெங்கட்பிரபு? – அவரே தந்த விளக்கத்தை பாருங்க!

- Advertisement -

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் அடுத்த நடிக்க உள்ள படம் கூலி. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இது ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படமாகும். தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்த ஷோபனா மீண்டும் கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

ஷோபனா தளபதி படத்தை தொடர்ந்து, சிவா என்ற படத்திலும் ரஜினியுடன் ஜோடியாக நடித்திருந்தார். அது மட்டும் இன்றி இது நம்ம ஆளு என்ற படத்தில் கே பாக்யராஜூடன் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர் ஷோபனா. இவர் மணிசித்ரதாழ் என்ற மலையாளப் படத்தில் நடித்த அந்த கேரக்டர்தான், தமிழ் சினிமாவில் சந்திரமுகி படமாக ஜோதிகா நடிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படம் டீசர் வெளியானதில் இருந்து பலரும் பல விதமான சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி ஒரு துறைமுகத்தில் இருக்கும் குடோனில் தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் அடியாட்களை அடித்து நொறுக்குவது போல் டீசரில் காட்சி இருக்கும். மேலும், ஒரு நீண்ட வசனத்தையும் ரஜினி பேசியிருப்பார். ரங்கா என்ற படத்தில் கராத்தே மணியுடன் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் பேசிய அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற அதே வசனத்தை இந்த கூலி படத்தின் படம் டீசர் பேசியிருப்பார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், என்னப்பா அநியாயம் இது, படத்தோட டைட்டிலும் காப்பி அடிச்சிருக்கார், படத்தோட டீஸர்ல வர்ற இந்த வசனமும் காப்பிதானா, லோகேஷ் கனகராஜ் சொந்தமா யோசிக்கவே மாட்டாரா என்று கடுமையாக விமர்சித்து வந்தனர். படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பிதான் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

கூலி படம் டீஸர் குறித்து, யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக் குமார் ஒரு வீடியோ வெளியிட்டு கலாய்த்திருக்கிறார். அதில் அவர், இப்போது வரும் படங்கள் ட்ரைலர் எல்லாமே ஒரே மாதிரி இருக்கு. ரசிகர்களை தூண்டிவிடும் விதமாக, பில்டப் காட்சிகளே அதிகமாக இருக்கிறது என்று அந்த வீடியோவில் கிண்டலாக தெரிவித்து இருந்தார்.

அந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இந்த வீடியோவை ஷேர் செய்திருப்பதால் அவர் ரஜினி படத்தை கலாய்த்து இருக்கிறாரா என்று ஒரு நபர் கேள்வி கேட்டு பதிவிட்டார். அதற்கு வெங்கட் பிரபு கொடுத்த பதிலில், இல்லை, இல்லை. இது கமர்சியல் படம் எடுக்கும் எங்களைப் பற்றியதுதான், அவர் கார்த்திக்குமார் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். கமர்சியல் டெம்ப்ளேட் இல்லாமல் ஏதாவது புதியதாக நாங்கள் தர முயற்சித்தால், ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என வெங்கட் பிரபு அந்த பதிவில் பதிலளித்து இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்