- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தை துவங்குவதில் ஏற்பட்ட திடீர் சிக்கல்… அதற்கு சிவகார்த்திகேயன் படம்தான் காரணமா? -...

தலைவர் 173 படத்தை துவங்குவதில் ஏற்பட்ட திடீர் சிக்கல்… அதற்கு சிவகார்த்திகேயன் படம்தான் காரணமா? – விரக்தியடைந்த ரஜினி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தலைவர் 173 என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்கிறார். சாய் அபயங்கள் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் துவங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குடும்ப கதை பின்னணியில் உருவாகும் ஒரு சென்டிமென்ட் கதையாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் தலைவர் 173 படப்பிடிப்பை துவங்குவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது பராசக்தி படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிப்பதாக இருந்தது. அந்த படத்தை சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்வதாக கமிட் ஆகியிருந்தார்.

இந்த படத்துக்காக நான் தியேட்டரிக்கல் பிஸினஸ் நடந்த நிலையில் சாட்டிலைட் டிஜிட்டல் ஆடியோ உரிமம் போன்றவற்றில் ரூ. 90 கோடி வரை வியாபாரம் நடந்து பணமும் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தை டைரக்ட் செய்யாமல் சிபி சக்ரவர்த்தி இப்போது ரஜினி படத்தை டைரக்ட் செய்ய கமிட் ஆகி விட்டார்.

- Advertisement -

அதனால் தயாரிப்பாளர் என்ற முறையில் சுதன் நான் தியேட்டரிக்கல் பிஸினஸ் செய்த வகையில் சிவகார்த்திகேயன் படத்தை எப்போது அவர்களுக்கு தருவது என்கிற முடிவை சொல்ல வேண்டும் அதற்கு சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயன் படத்தை இயக்க முன்வர வேண்டும். எப்போது என அவர் தேதி கொடுத்தால் தான், சிபி சக்ரவர்த்திக்கு தயாரிப்பாளர் சுதன் என்ஓசி கொடுக்க முன்வருவார் என்கிற ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படம் எப்போது துவங்கி எப்போது முடிவடையும். தியேட்டர் ரிலீஸ் எப்போது? அந்த படம் எப்போது நான் தியேட்டரிக்கல் வியாபார அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் என்கிற சிக்கல் காரணமாக என்ஓசி பெறாமல் ரஜினி படத்தை இயக்க தயாரிப்பாளர் சுதன், இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு என்ஓசி தர வேண்டிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் ரஜினி படத்துக்கு ஷூட்டிங் ஆரம்பிப்பதில் இது நெருக்கடியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்