தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன் என்றும் அழைக்கப்பட்டார். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மற்றவர்களுக்கு உதவுவதில் விஜயகாந்த் உதாரணமாக இருந்தார். குறிப்பாக யாரை பார்த்தாலும் அவர் கேட்கிற முதல் கேள்வியே சாப்பிட்டீங்களா? என்பதுதான்.
விஜயகாந்தை போலவே காமெடி நடிப்பில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கவுண்டமணி. காமெடி கிங் என்று அழைக்கப்படுபவர். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சிம்பு என நட்சத்திர ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்தவர். சில படங்களில் ஹீரோவாகவும் கவுண்டமணி நடித்திருக்கிறார்.
நடிகர் கவுண்டமணியை பொருத்த வரை எந்த படத்தில் யாருடன் நடித்தாலும் அவரது டயலாக் டெலிவரி மாஸ் ஆக தான் இருக்கும். சில நேரங்களில் உடன் நடிக்கும் ஹீரோக்களையே பயங்கரமாக கலாய்த்து விடுவார். ஒரு விநாடியில் டயலாக்கில் அவர்களை மட்டம் தட்டி விடுவார். அதனால் ரஜினி, கமல் கூட கவுண்டமணியுடன் நடிக்கும் போது கொஞ்சம் உஷாராகவே இருப்பார்கள்.
இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த படம் சின்னக்கவுண்டர். மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற கேப்டன் படங்களில் சின்னக்கவுண்டர் படமும் ஒன்று. இந்த படத்தில் கவுண்டமணி கிராம மக்களின் ஆடைகளை துவைக்கும் சலவைக்காரர் கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தின் காமெடி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. கவுண்டமணியுடன் செந்திலும் நடித்திருப்பார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியதாவது, விஜயகாந்தின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அவர் நடிக்க வேண்டிய படங்கள், கேரக்டர்கள் அவரது சம்பளம் விஜயகாந்த் திருமணம் உட்பட அனைத்தையும் முடிவு செய்தது அவரது நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர்தான்.
சின்னக்கவுண்டர் படத்தில் விஜயகாந்த் நடிக்க முடிவான போது, படத்தின் இயக்குனர் ஆர்வி உதயகுமாரிடம் இப்ராகிம் ராவுத்தர் ஒரு கண்டிசன் போட்டார். கதை நல்லா இருக்குது, விஜயகாந்த் முன்னணி நடிகராக பெரிய இமேஜில் உள்ளார். இந்த படத்தில் கவுண்டமணி, விஜயகாந்திடம் பேசவே கூடாது. ஏதாவது பேசி அந்த கேரக்டரை கலாய்த்துவிட்டால் அந்த படமே நிற்காது என்று கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டார். அதனால் இந்த படத்தில் விஜயகாந்த், கவுண்டமணி இணைந்து நடித்த காட்சிகளே மிக குறைவாக தான் இருக்கும் என்று தயாரிப்பாளர் சிவா கூறியிருக்கிறார்.





