- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்தை நிராகரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்… அஜீத்குமார் போட்ட அதிரடி நிபந்தனைகள்தான் காரணமா?...

ஏகே 64 படத்தை நிராகரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்… அஜீத்குமார் போட்ட அதிரடி நிபந்தனைகள்தான் காரணமா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்தாண்டில் நடித்த விடாமுயற்சி குட்பேட் அக்லி ஆகிய 2 படங்களும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியாகின. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் மொத்தமாக 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ்களில் கலந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸ் வருகிற அக்டோபர் மாதம் வரை 10 மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கிறது.

- Advertisement -

பல்வேறு நாடுகளில் நடந்து வரும் இந்த கார் ரேஸில் அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராக உள்ள நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறார். வரும் அக்டோபருக்கு பிறகு சென்னை திரும்பும் அஜீத்குமார் தனது அடுத்த 64வது படத்தில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார். குட்பேட் அக்லி படம் வெற்றியை பெற்ற நிலையில், தனது அடுத்த படத்தையும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க அஜீத்குமார் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

இந்நிலையில் ஏகே 64 படத்தை தயாரிக்க பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்த தகவல் நேற்று வெளியானது. குறிப்பாக சன் பிக்சர்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ், ஏசியன் நிறுவனம், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட், மைத்ரி மூவி மேக்கர் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் என முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அஜீத்குமார் நடிக்கும் படத்தை தயாரிக்க மறுத்து நிராகரித்தது கோலிவுட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் 180 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அதிக சம்பளம் அதிக பட்ஜெட் படம் என்பதால், ஏகே 64 படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மறுப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போது கூடுதலாக இன்னும் சில முக்கிய காரணங்களும் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக நடிகர் அஜீத்குமார் 180 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். இதில் பெரும் தொகையை படப்பிடிப்பு துவங்கும் முன்பே அட்வான்ஸ் தருமாறு கூறுகிறார்.

முதலில் 50 சதவீதம் அட்வான்ஸ், மீதி 50 சதவீதம் தொகையை மாதந்தோறும் தனது வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கூறிவந்த அஜீத்குமார் இப்போது முன் தேதியிட்ட செக்குகளாக தர வேண்டும் என்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி தந்திருக்கிறார். மேலும் ஷூட்டிங் முடிவதற்குள் தனது முழு சம்பளத்தையும் கொடுக்கவும் வலியுறுத்தி இருக்கிறார். வழக்கமாக டப்பிங் வரையும் முழு சம்பளத்தையும் தர நடிகர்கள் அவகாசம் தருவது வழக்கம். இப்படி ஒட்டுமொத்தமாக அஜீத்குமார் போட்ட கண்டிஷன்கள் காரணமாகவே முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், ஏகே 64 படத்தை தயாரிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்