நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில், பல்வேறு இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்து பின்பு இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவரது இயக்கத்தில் பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் மாதவனை வைத்து தம்பி, வாழ்த்துக்கள் என இரண்டு திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். தங்கர் பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் திரைப்படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் வருவார். இதே போல் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திலும் சீமானை நாம் பார்க்க முடியும்.
இதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறிய அவர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இப்படியான சூழலில் சீமான் நீண்ட காலம் கழித்து மீண்டும் திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். அவருடைய தந்தை கதாபாத்திரத்தில் சீமான் வருகிறாராம். படத்தில் இயற்கை விவசாயத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஒரு கேரக்டர் என்று கூறப்படுகிறது. மேலும் எல்ஐசி திரைப்படத்தில் கலகலப்புக்கு எந்த ஒரு பஞ்சமும் இருக்காது என்று பேசப்படுகிறது.
இப்படியான சூழலில், விடுதலை திரைப்படத்திற்காக முதலில் சீமானையே வெற்றிமாறன் அனுப்பியதாக கூறப்படுகிறது. விடுதலை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது வெற்றிமாறன் எடுத்து வருகிறார். சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இதில், பெருமாள் வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதி வருகிறார்.
முதல் பாகத்தில் அவரது காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்தில் அவருக்கான வெயிட்டேஜ் நன்றாக கூட்டப்பட்டது. இப்படியான சூழலில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு முதலில் சீமானைத்தான் நடிக்க வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போய்விட்டதாம். இதனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை உறுதிப்படுத்தி இருப்பதால், ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.





