- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த வாரம் அவங்க 2 பேரும்தான் வெளியே போவாங்கன்னு பார்த்தா… இந்த 2 பேரை வெளியே...

இந்த வாரம் அவங்க 2 பேரும்தான் வெளியே போவாங்கன்னு பார்த்தா… இந்த 2 பேரை வெளியே அனுப்பிட்டாங்களே? – புலம்பும் பிக்பாஸ் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதுவரை ஆரவ் ஆரி அர்ச்சனா ரித்விகா முகின் அசீம் முத்துக்குமரன் ராஜூ என 8 பேர் டைட்டில் வின்னராக இதில் வெற்றி பெற்ற நிலையில் இப்போது 9வது சீசன் நடந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விஜய் டிவியில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இப்போது 11 வாரங்களை கடந்து 70 நாட்களுக்கு மேல் சென்றுக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அந்தளவுக்கு சுவாரசியம் இல்லை என்பதே பார்வையாளர்களின் விமர்சனமாக உள்ளது.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை பிரவீன் காந்தி பிரவீன் ராஜ் கலையரசன் வியானா பிரஜின் கெமி துஷார் அப்சரா என பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 9 துவங்கிய முதல் வாரத்திலேயே நந்தினி என்ற போட்டியாளர் அவராகவே போட்டியில் தொடர விரும்பவில்லை என்று கூறி பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்று விட்டார்.

கடந்த வாரங்களில் பிரஜின் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்தில் கம்ருதீன் அல்லது பார்வதி வெளியேற்றப்பட வேண்டும் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பும் கோரிக்கையும் இருந்து வந்தது. ஏனெனில் வீட்டுக்குள் அவர்களது அநாகரிகமாக சில நடவடிக்கைகள் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதுவும் பார்வதியின் வரம்பு மீறிய பேச்சும் நடவடிக்கைகளும் அவர் மீது பார்வையாளர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வாரமும் பார்வதியை கடுமையாக கண்டிக்காமல் தண்டிக்காமல் ஏதோ மழுப்பலாக பேசிவிட்டு விஜய் சேதுபதி மற்ற போட்டியாளர்களை கண்டிக்கிறார் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது எஃப் ஜே மற்றும் ஆதிரை ஆகிய 2 பேரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்வதி கம்ருதீன் தான் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேறுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. டிஆர்பி ரேட்டிங் என்ற காரணத்துக்காக பார்வதியை பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர செய்வது மிகவும் தவறான செயல் என்று பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்