- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தை இயக்கப் போவது யார்? இழுபறி நிலையில் இயக்குனர்கள், ஷெட் அமைக்கும் பணிகள்...

தலைவர் 173 படத்தை இயக்கப் போவது யார்? இழுபறி நிலையில் இயக்குனர்கள், ஷெட் அமைக்கும் பணிகள் திடீர் நிறுத்தம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 2027 பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் என திட்டமிடப்பட்டுள்ளது.

தலைவர் 173 படத்தை முதலில் இயக்க கமிட் ஆனது இயக்குனர் சுந்தர் சி தான். ஆனால் அவர் திடீரென விலகிய நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கமிட் செய்யப்பட்டார். இவர் சொன்ன பேமிலி சப்ஜெக்ட் கதை பிடித்துப் போனதால் இந்த படத்துக்கு ரஜினி ஓகே சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின்படி தலைவர் 173 படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவில்லை. அவருக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து தான் டைரக்ட் செய்கிறார் என்று கூறப்பட்டது. ஏனெனில் துரந்தர் 2 படம் பாணியில் கதையை கொண்டு செல்லும்படி ரஜினி கூறியதாகவும் அதற்கு சிபி சக்ரவர்த்தி மறுப்பு தெரிவித்ததால் அவரை ரஜினி வேண்டாம் என்றும் கூறியதாகவும் தகவல் பரவியது.

இதற்கிடையே ரஜினி படத்தை இயக்குவதற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் சிம்புவின் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய இருந்த அஸ்வத் மாரிமுத்து, சிம்புவிடம் ரஜினி படத்தை இயக்க அனுமதி பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் அதற்கான என்ஓசி வழங்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஆனால் படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், ரஜினி நடிக்கும் படத்தில் இருந்து சிபி சக்ரவர்த்தியை இன்னும் விலக்கவில்லை. இப்போதும் அவர் கமல் நிறுவனம் அமைத்து தந்துள்ள அலுவலகத்தில் தலைவர் 173 படத்துக்கான பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் இந்த அலுவலகம் 30 லட்சம் ரூபாய் செலவில் இண்டீரியர் ஒர்க் செய்து புதுப்பித்து தரப்பட்டுள்ளது.

ஒருபுறம் ரஜினி விரும்பியபடி தலைவர் 173 படத்துக்காக கதை திரைக்கதையில் சிபி சக்ரவர்த்தி மாற்றங்கள் திருத்தங்கள் செய்து ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார். மற்றொரு புறம் அஸ்வத் மாரிமுத்துவும் நான்தான் ரஜினியின் தலைவர் 173 படத்தின் இயக்குனர் என்று கூறிக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே சென்னை பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டுடியோவில் இந்த படத்துக்காக போடப்பட்டு வந்த செட் ஒர்க்கும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி பல குழப்பங்களில் தலைவர் 173 படம் காணப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்