- Advertisement -
நடிகர் நமோ நாராயணா கூறியதாவது, ஜெயிலர் 2 படம் பற்றி எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் ரஜினியுடன் நடிப்பேன் என்று என் கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. அவரோடு நடித்தது சந்தோஷத்தையும் மனநிறைவையும் தருகிறது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி பழக வேண்டும்? எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பதை ரஜினி மூலம் தெரிந்துக்கொண்டேன். இத்தனை வெற்றிகளை பெற்ற பிறகும் மனிதர் இயல்பாக இருக்கிறார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் நமோ நாராயணா கூறியிருக்கிறார்.





