- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது இட்லி கடை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா... தனுஷ்...

என்னது இட்லி கடை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதா… தனுஷ் ரசிகர்களே நம்ப முடியாத அளவுக்கு வெளியான தகவல்…

- Advertisement -

நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை பெற்று தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருகிறார் தனுஷ். இது மட்டுமல்ல அவர் இயக்கத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பவர் பாண்டி திரைப்படம்தான் தனுஷின் இயக்கத்தில் முதல் படமாக உருவானது. ராஜ்கிரண் மற்றும் ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

காதலை வேறொரு பரிணாமத்தில் கூறி அசர வைத்திருந்தார் இயக்குனர் தனுஷ். இதனைத் தொடர்ந்து ஒரு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட அவர், ராயன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக தடம் பதித்தார். தனுஷ் இயக்கி நடித்திருந்த அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் ஏ ஆர் ரகுமானின் துள்ளலான இசையால் இந்த திரைப்படத்தின் வசூல் நூறு கோடியை தாண்டியது.

- Advertisement -

பின்னர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்னும் திரைப்படத்தை தனுஷ் இயக்கினார். தனுஷின் சகோதரி மகன் பவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருந்தார்.

நித்யா மேனன் ராஜ்கிரண் சத்யராஜ் சமுத்திரக்கனி அருண் விஜய் பார்த்திபன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் இணைந்தது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருந்தார். அதேபோல் தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இட்லி கடை வெளியானது.

- Advertisement -

வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் முதன்மை பணியாளராக இருக்கிறார் தனுஷ். ஒரு கட்டத்தில் அங்கிருந்து, தனது சொந்த கிராமத்திற்கு திரும்பும் தனுஷ், தனது தந்தையின் இட்லி கடையை நடத்த விரும்புகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா, அதற்கு தடையாக வந்தவர்களை என்ன செய்தார் தனுஷ் என்பதைத்தான் இந்த திரைப்படம் அலசுகிறது. ஓரளவு நல்ல விமர்சனத்தையே பெற்று இருக்கும் இந்த திரைப்படத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனுடன் வெளியான காந்தாரா திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான தாக்கம், இந்திய திரை உலகம் முழுக்க இருந்தாலும், இட்லி கடைக்கான ரசிகர்களும் தியேட்டர்களுக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். இதன் காரணமாக படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த திரைப்படம் நான்கு நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்