- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா நடித்த அந்த மாஸ் ஹிட் படத்தில் இப்படி ஒரு சொதப்பலா? 20 ஆண்டுகளாக நீடித்து...

சூர்யா நடித்த அந்த மாஸ் ஹிட் படத்தில் இப்படி ஒரு சொதப்பலா? 20 ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சை – அட இதை யாருமே கவனிக்கலையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கவனிக்கப்படுவர் ஏஆர் முருகதாஸ். கடந்த 2001ம் ஆண்டில் அஜீத்குமார் நடித்த தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்தது. இதில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நாயகியாக லைலா நடித்திருந்தார். இந்த படத்தில்தான் அஜீத்குமாருக்கு தல என்ற பெயர் உருவானது.

தொடர்ந்து விஜயகாந்த் நடித்த ரமணா படம், ஏஆர் முருகதாஸூக்கு பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு சூர்யா நடித்த கஜினி படத்தை இயக்கினார். சஞ்சய் ராமசாமியாக சூர்யா வேற லெவலில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற கஜினி படத்தை அமீர்கான் நடிப்பில் இந்தியில் ஏஆர் முருகதாஸ் ரீ மேக் செய்தார்.

அதன்பிறகு ஏழாம் அறிவு துப்பாக்கி கத்தி ஸ்பைடர் சர்கார் தர்பார் ஆகிய படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களில் ரஜினி நடித்த சர்கார் படம் மட்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மற்றபடி துப்பாக்கி கத்தி சர்கார் போன்ற விஜய் படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படமும் மாஸ் ஹிட் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005ம் ஆண்டில் வெளியான ஏஆர் முருகதாஸின் படம் கஜினி. சூர்யா அசின் நயன்தாரா ரியாஸ்கான் பிரதீப் ரவட் சத்யன் மனோபாலா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹரீஷ் ஜெயராஜ் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின. சஞ்சய் ராமசாமி கேரக்டரில் ஏர்வாய்ஸ் மொபைல் போன் உரிமையாளராக சூர்யா நடித்திருந்தார்.

கஜினி படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு விஷயம் இன்று வரை சர்ச்சையாகி வருகிறது. அதாவது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நடந்ததை மறந்து விடும் மெமரி லாஸ் நோயாளியான சூர்யா, தனது உடம்பில் மறக்க கூடாத விஷயங்களை எழுதி வைத்துக்கொள்வது போல படத்தில் காட்சி உள்ளது. ஆனால் உடம்பின் முன்பகுதி மட்டுமின்றி முதுகு பகுதியிலும் இதுபோன்று எழுதியிருப்பார். தன்னுடைய முதுகில் சூர்யாவே எப்படி எழுதிக்கொள்ள முடியும் என்று இப்போதும் கஜினி படத்தை பார்க்கும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்