- Advertisement -
Homeபொழுதுபோக்கு61 வயதில் 3வது திருமணம் செய்த பாலிவுட் நடிகர் அமீர்கான் - அதை இப்படி தான்...

61 வயதில் 3வது திருமணம் செய்த பாலிவுட் நடிகர் அமீர்கான் – அதை இப்படி தான் செய்வீங்களா? கொதித்து எழுந்த நெட்டிசன்கள்!

- Advertisement -

குடும்ப வாழ்க்கையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் பண்பாட்டின் கலாச்சாரம் எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. அதிலும் சினிமாத்துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் படத்துக்கு படம் வேறு நாயகன், வேறு நாயகியுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது போல் உண்மையான குடும்ப வாழ்க்கையிலும் ஜோடிகளை மாற்றிக் கொள்கின்றனர்.

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி துறைகளிலும் உள்ள நடிகர் நடிகைகள் சிலர், இப்படி தங்களது துணையை விவாகரத்து செய்துவிட்டு அடுத்த திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி பல நடிகர் நடிகைகள் 2வது திருமணம் 3வது திருமணம் 4வது திருமணம் வரை செய்து கொள்கின்றனர். இது அவர்களை பொருத்தவரை சகஜமானதாக இருக்கிறது.

- Advertisement -

அந்த வரிசையில் இப்போது 61 வயதான பிரபல இந்தி நடிகர் அமீர்கான் கௌரி ஸ்ப்ராட்டின் என்பவரை 3வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நீண்ட காலமாக அவர்களுக்குள் காதலித்த நிலையில் இப்போது அவர்கள் திருமணம் நடந்துள்ளது. இதற்காக கெளரி ஸ்ப்ராட்டின் உடன் நடிகர் அமீர்கான் புதிய திருமண ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வுதான் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமண ஒப்பந்த நிகழ்வின்போது அமீர்கானின் முதல் மனைவி 2வது மனைவி அவரது மகன் மற்றும் கௌரி ஸ்ப்ராட்டின் குழந்தைகள் என ஒட்டுமொத்த குடும்பமும் நேரில் நின்று வேடிக்கை பார்த்ததுதான் இந்த விவகாரத்துக்கு காரணம்.

- Advertisement -

நமது குடும்ப அமைப்பையே கேலிக்கு உள்ளாக்கும் வகையில் அரங்கேறிய இந்த சம்பவம் இணையத்தில் காட்டு தீயாகப் பரவி கடுமையான விவாதங்களை கிளப்பியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வில் ராஜ் தாக்கரே போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல நெட்டிசன்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.

நடிகர் அமீர்கான் 3வது திருமணத்தை தனது முந்தைய 2 மனைவிகள் பிள்ளைகள் முன்னிலையில், அதே போல் கௌரி ஸ்ப்ராட்டின் தனது பிள்ளைகள் முன்னிலையில் இந்த திருமண ஒப்பந்த்தை செய்துள்ளனர். இதுபோன்ற அநாகரிகமான குடும்ப வாழ்க்கையை கேலிக்கூத்தாக்கும் பொருட்டு அவர்கள் நடந்துக்கொண்டது, நமது கலாசாரத்தை சிதைக்கும் ஒரு ஏற்க முடியாத நிகழ்வாக நெட்டிசன்கள் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்