- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படியும் ஒரு சர்ச்சையா? தனது வீட்டில் வேலை செய்யும் பெண்களை சிறை பிடித்து வைத்தாரா நடிகர்...

இப்படியும் ஒரு சர்ச்சையா? தனது வீட்டில் வேலை செய்யும் பெண்களை சிறை பிடித்து வைத்தாரா நடிகர் மோகன் ரவி? – குழப்பத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால் சமீபகாலமாக அவர் சர்ச்சை நாயகனாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். ஏற்கனவே பல விவகாரங்களிலும் விமர்சனங்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ள நடிகர் ரவி மோகன் தற்போது புதிய ஒரு குற்றச்சாட்டையும் சந்தித்துள்ளார். நடிகர் ரவிமோகன் தனது இல்லத்தில் பணிபுரியும் வீட்டு வேலை செய்யும் பெண்களை சிறை பிடித்து வைத்திருந்ததாக ஒரு பகீர் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருந்து வருகிறார். கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் அவர் பரபரப்பான ஒரு பேசுபொருளாக மாறி இருக்கிறார். மேலும் தனது மனைவியை பிரிந்த அவர் பாடகி கெனிஷா என்பவருடன் இணைந்து காணப்பட்டது பெரிய அளவில் அவர் மீது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

பொது இடங்களுக்கு இருவரும் ஜோடியாக வந்தது, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒரே மாதிரியான நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக கலந்துக்கொண்டது என பலத்த சர்ச்சையை ரவிமோகன் சந்தித்தார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு கெனிஷா, எனக்கு யாரும் வேண்டாம் என ரவிமோகனையும் விட்டு பிரிந்து சென்றார். இதுகுறித்து பிரஸ்மீட் ஒன்றில் பேசிய நடிகர் ரவி மோகன், எனக்கு ஆதரவாக இருந்த கெனிஷாவும் சென்றுவிட்டார்.

எனக்கு விரைவாக விவாகரத்து வேண்டும். அதுவரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க தற்போது நடிகர் ரவி மோகன் மீது ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் வீட்டு வேலை செய்த 2 பணிப் பெண்களையும் அதில் ஒருவரது மகனையும் நேற்றிரவு, 22ம் தேதி இரவு ரவி மோகன் சிறைபிடித்து வைத்திருந்தார்.

- Advertisement -

வேலைக்குச் சென்ற அவர்கள் வீடு திரும்பாததால் நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ரவி மோகன் வீட்டில் அந்த பெண்களும் மற்றும் அந்த சிறுவன் இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் வீட்டில் இருந்த பொருட்களை திருடியதால் அவற்றை மீட்க அவர்களை பிடித்து வைத்திருப்பதாக ரவிமோகன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக போலீசார் அந்த பெண்களை அங்கிருந்து மீட்டு வந்துள்ளனர். மேலும் திருடு போனதற்கு சிறை பிடிக்கக்கூடாது. புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்வதாகவும் நடிகர் ரவி மோகனுக்கு போலீஸ் அதிகாரிகள் அட்வைஸ் செய்துள்ளனர். தற்போது வரை ரவி மோகன் தரப்பில் இருந்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் ரவிமோகன் தன் வீட்டு பணிப்பெண்களை சிறைபிடித்து வைத்திருந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்