- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. உங்கள்ட்ட ஜி பே நம்பர் இருக்குல்ல.. கூல் சுரேஷ் வேண்டுகோள்

எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. உங்கள்ட்ட ஜி பே நம்பர் இருக்குல்ல.. கூல் சுரேஷ் வேண்டுகோள்

- Advertisement -

காதல் அழிவதில்லை, காக்க காக்க உள்ளிட்ட சில படங்களில் நடித்த கூல் சுரேஷ் சிம்புவின் தீவிர ரசிகராக அறியப்படுபவர். மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களுக்கு அவர் செய்த வித்தியாசமான ப்ரோமோஷன் பலரையும் கவர்ந்தது. அதனையடுத்து பல படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு வருவதையும் வித்தியாசமான முறையில் நகைச்சுவையாக எதையாவது செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

ஒருகட்டத்தில் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அவர் அழைக்கப்பட்டார். அந்தவகையில் மன்சூர் அலிகான் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அவர் அழைக்கப்பட்டார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினிக்கு திடீரென மாலை போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தத் தொகுப்பாளினி கோபத்தில் அந்த மாலையை கீழே விட்டெறிந்தார்.

- Advertisement -

அதற்கு அந்த நிகழ்ச்சியிலேயே வைத்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்டிருந்த கூல் சுரேஷ் எப்போதும் விளையாட்டாக செய்வது போல்தான் செய்தேன். ஆனால் அது விபரீதமாகிவிட்டது. அந்தப் பெண்ணிடமும் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இதுபோல் செய்யமாட்டேன் என தெரிவித்திருந்தார்.

அதனையடுத்து அந்தப் பெண் பேசுகையில் அவர் ஏற்கனவே என்னிடம் ஒரு மாதிரி நடந்திருக்கிறார். அவரை யூட்யூப் சூப்பர் ஸ்டார் என்று அழைக்காததால் பழிவாங்குவதற்காக இப்படி செய்துவிட்டார். இனி அப்படி செய்தால் ஒன்று ஓங்கி அரைந்துவிடுவேன் இல்லை காவல் துறையில் புகார் அளிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கூல் சுரேஷ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

அந்த வீடியோவில் அவர், “போன வாரம் முழுவதும் எனது வீடியோதான் வைரலாகியிருந்தது. அந்த சகோதரிக்கு தெரியாமல் மாலை போட்ட தவறை வைத்து யூட்யூபர்ஸ் இஷ்டத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு மூன்று மில்லியன்வரை வியூஸ் போயிருக்கிறது. என்னால் நீங்கள் பயன்படுகிறீர்கள் சந்தோஷம். இதை சாக்காக வைத்து பலர் திட்டினீர்கள்.

எங்கள் ஏரியாவில் ஒருவர் குடித்துவிட்டு அவரது குடும்பத்தை கவனிக்காதவர். அவரது மகனுக்குக்கூட நான் ஒருமுறை ஃபீஸ் கட்டினேன். அவர் என்னிடம் வந்து நீங்கள் அப்படி செய்திருக்கக்கூடாது என்று அட்வைஸ் செய்கிறார். அப்படிபட்டவர்கூட எனக்கு அட்வைஸ் செய்யும் நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். இது என் தவறுதான். விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டேன். தப்பு செய்தால் அனுபவித்துதானே ஆகவேண்டும். பலர் என்னை திட்டினாலும் சிலர் எனக்கு ஆறுதலாக இருந்தனர். அந்த சகோதரிக்கும் மரியாதை தர வேண்டும் என்றுதான் மாலை போட்டீர்கள் என கூறினர். என்னை திட்டியவர்கள் அனைவரையும் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.

நான் இப்போது கடுமையான வறுமையில் இருக்கிறேன். நான் வசதியானவன் எல்லாம் இல்லை. சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலிருந்தே ஒருமாதிரி என் பொருளாதார நிலைமை சரியில்லை. அதனால் யூட்யூபர்ஸ் உதவி செய்ய வேண்டும். அதேபோல் மன்சூர் அலிகான் அண்ணா நீங்களும் எனக்கு உதவி செய்யுங்கள்.எனக்கும் என் குடும்பத்துக்கும் உதவி தேவைப்படுகிறது. அதனால் தயவு செய்து உதவி செய்யுங்கள். நிறைய பேரிடம் என்னுடைய நம்பர் இருக்கும். அதுதான் கூகுள் பே, போன் பே நம்பர். அதனால் தயவு செய்து உதவுங்கள். இந்த நேரத்தில் உதவினால் அது பெரிய உதவியாக இருக்கும்” என்றார்.

- Advertisement -

சற்று முன்