- Advertisement -
Homeபொழுதுபோக்குகாளீசா… எட்றா கொக்கி - மீண்டும் பார்க்க நீங்க தயாரா? ரஜினிகாந்த் நடித்த கூலி படம்...

காளீசா… எட்றா கொக்கி – மீண்டும் பார்க்க நீங்க தயாரா? ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்து இருந்தார். சத்யராஜ் ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் உபேந்திரா அமீர்கான் நாகர்ஜூனா சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி விக்ரம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் என்பதால் கூலி படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் முதல் படமாகவும் கூலி இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் கூலி படத்தை பொருத்த வரை ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களின் விருப்பத்தை எதிர்பார்ப்பை ஒரு இயக்குனராக லோகேஜ் கனகராஜ் திருப்தி செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை. கதை திரைக்கதை சொதப்பல், படம் முழுவதும் லாஜிக் மிஸ்டேக் என கூலி காட்டு மொக்கை படம் என்ற கடும் விமர்சனத்தை சந்தித்தது.

இந்த படத்தை பொருத்த வரை அனிருத் இசை, வில்லன் சௌபின் சாஹிர் நடிப்பு மட்டுமே படத்தை ஓரளவுக்கு தூக்கி தாங்கி பிடித்தது. அனிருத் இசையில் 2 பாடல்கள், பிஜிஎம் மட்டுமே படத்துக்கு பக்கபலமாக இருந்தது. மேலும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்க முடியாமல் போனதும் படத்துக்கு பின்னடைவை தந்தது. எனினும் ரஜினி படம் என்பதால் எப்படியோ ரூ. 510 கோடி வரை வசூலித்து விட்டது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை கார்த்திக் சுப்பராஜ் பா ரஞ்சித் போன்றவர்கள் சிறப்பாக தங்களது படங்களில் பயன்படுத்தி இருந்தனர். சந்திரமுகி படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அப்படி ஒரு மாஸ் அறிமுக காட்சி கூட இல்லாமல், கூலி படத்தில் கறிமுட்டியில் சிக்கனை கத்தியால் வெட்டும் காட்சியில் ரஜினியை அறிமுகம் செய்ததே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டது.

கடந்த மாதம் 14ம் தேதி வெளியான இந்த படம் சரியாக 4 வாரங்களில் அதாவது 28 நாட்களில் ஓடிடிக்கு வருகிறது. வருகிற 11ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கூலி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அமேசான் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தியேட்டரில் இந்த படத்தை பார்த்தவர்களும், பார்க்காமல் தவற விட்டவர்களும் வரும் 11ம் தேதி ஓடிடியில் கூலி படத்தை பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்