- Advertisement -
Homeபொழுதுபோக்குவண்டி இதுக்கு மேல நகராதோ…? கூலி படத்தின் 7 நாட்கள் மொத்த வசூல்… சோலி முடிஞ்சுது...

வண்டி இதுக்கு மேல நகராதோ…? கூலி படத்தின் 7 நாட்கள் மொத்த வசூல்… சோலி முடிஞ்சுது என்று புலம்பும் சன் பிக்சர்ஸ்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். ரஜினியுடன் சத்யராஜ் நாகர்ஜூனா சௌபின் சாஹிர் உபேந்திரா அமீர்கான் ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

கூலி படம் முதல் நாளில் மொத்த வசூல் 151 கோடி ரூபாய் என்றும் 2ம் நாளில் மொத்த வசூல் 230 கோடி ரூபாய் என்றும் 3ம் நாளில் மொத்தமாக 310 கோடி ரூபாய் என்றும் வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் தெரிவித்தன. 4ம் நாளில் மொத்த வசூல் 404 கோடி ரூபாய் என்று கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனமே போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தது.

- Advertisement -

இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் 4 நாட்கள் வசூல் 403 கோடி 50 லட்சம் ரூபாய் என்ற நிலையில் 50 லட்சம் அதிகமாக வசூலித்து கூலி படம் லியோ பட சாதனையை முறியடித்து விட்டதாக ரஜினி ரசிகர்கள் பெருமையாக பேசினர். ஆனால் லியோ கூலி 2 படங்களுக்குமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் கூலி படம் வெளியாகி 7 நாட்கள் ஆன நிலையில் அதாவது கடந்த ஒரு வாரத்தில் 20ம் தேதி வரை கூலி படத்தின் மொத்த வசூல் ரூ. 435 கோடி என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் அசுர வேகம் காட்டிய கூலி படம் இப்போது, இனி வண்டி நகராதோ என்று சொல்லும் விதமாக வசூலில் மந்தமாகி விட்டது.

- Advertisement -

அதாவது ஆரம்ப நாட்களில் தினமும் 80 கோடி ரூபாய் வரை 2வது 3வது நாட்களில் வசூலித்த கூலி படம் இப்போது 10 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூலில் பின்தங்கியிருக்கிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 450 கோடி ரூபாய் என்ற நிலையில், பட்ஜெட்டை விட 50 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை அதிகமாக வசூலித்தாலே அது பெரிய வசூல்தான் என்றும் பேசப்படுகிறது.

இப்போது ஏ சான்றிதழ் தவிர்த்து யுஏ சான்றிதழ் கூலி படத்துக்கு வழங்கப்பட்ட நிலையில் படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் 4 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேமிலி ஆடியன்ஸ் வருகை அதிகரித்தால் வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த பம்மாத்து வேலை எல்லாம் காட்டி இந்த மொக்கை படத்தை ஓட வைத்துவிட முடியாது என நடுநிலையான ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்