- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் படத்தில் மீண்டும் நடிகை சிம்ரன், இது சூப்பர் ஜோடியாச்சே என ஆச்சரியப்பட்ட...

நடிகர் அஜீத்குமார் படத்தில் மீண்டும் நடிகை சிம்ரன், இது சூப்பர் ஜோடியாச்சே என ஆச்சரியப்பட்ட ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவர் நாயகனாக அறிமுகமான அமராவதி படம் முதல் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வரை இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக அஜீத்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் திரைக்கு வர உள்ளது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்ற தகவல் முதலில் வெளியான நிலையில் இப்போது மே 1ம் தேதி தொழிலாளர் தினம் அன்று தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் வெளியாக உள்ளது. இரண்டுமே மிக முக்கியமான படங்கள் என்பதால் அஜீத்குமார் படம் தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே நேரத்தில் வருகிற மே 1ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதி தொழிலாளர் தினம் மட்டுமின்றி அன்று நடிகர் அஜீத்குமாரின் பிறந்த நாளாகவும் இருப்பதால் ஏகே ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக குட்பேட் அக்லி படம் அமையவும் வாய்ப்புள்ளது.

நடிகர் அஜீத்குமாருடன் பல படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக சிம்ரன் வலம் வந்தவர். வசூல் ராஜா எம்பிபிஎஸ் பிரியமானவளே துள்ளாத மனமும் துள்ளும் அரசு ஏழுமலை ரமணா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர். சிம்ரன் என்றாலே இடையசைவில் நடனத்தில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

- Advertisement -

குறிப்பாக அஜீத்குமார் சிம்ரன் நடித்த வாலி அவள் வருவாளா உன்னைக்கொடு என்னை தருவேன் படங்களில் இந்த ஜோடி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. பேட்ட சீமராஜா அந்தகன் படங்களில் நடித்து செகண்ட் ரவுண்டில் உள்ள நடிகை சிம்ரன் இப்போது நடிகர் அஜீத்குமார் படத்திலும் மீண்டும் அவருடன் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள குட்பேட் அக்லி படத்தில் நடிகை சிம்ரன் நடிகர் அஜீத்குமாருடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இது கேமியோ ரோல்தான் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நடிகை திரிஷாதான் ஏகேவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் அஜீத்குமாருடன் சிம்ரன் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்