- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது ஆகஸ்ட் மாதமா... இல்லை அப்டேட் மாதமா... இத்தனை படங்களில் இருந்து விஷயங்கள் வெளியே வருதா......

இது ஆகஸ்ட் மாதமா… இல்லை அப்டேட் மாதமா… இத்தனை படங்களில் இருந்து விஷயங்கள் வெளியே வருதா… அப்படின்னா ரசிகர்களை கையிலே பிடிக்க முடியாதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. இதில் இந்த மாதம் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் காவியம் கூலி. ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். நாகர்ஜுனா சத்யராஜ் உபேந்திரா அமீர்கான் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அண்மையில் வெளியான அதன் டிரைலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் லோகேஷ் கனகராஜ் நிச்சயமாக திரைக்கதையில் மேஜிக் செய்திருப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். படத்திலிருந்து வெளியான பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. இதன் காரணமாக கூலி திரைப்படத்திற்கு ஒரு பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த மாதத்தில் இறுதியில் அஜித் குமாரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. ஏற்கனவே அஜித்குமாருக்கு இந்த வருடம் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன.

இதில் குட் பேட் அக்லி திரைப்படத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்தான் மீண்டும் ஒருமுறை அஜித்துடன் கை கோத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக, தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா வருகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

- Advertisement -

மிக முக்கியமாக சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டும் இந்த மாதம் வெளியாகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் க்ளிப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. காந்தாரா திரைப்படத்தைப் போன்று இதிலும் ஆன்மீகம் கலந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் ஆக்சன் கதைக்களத்திலும் இது எடுக்கப்படுகிறது.

வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக சிவகார்த்திகேயனின் மதராசி திரைப்படமும் அடுத்த மாதம் வெளியாவது நம் அனைவருக்கும் தெரியும். ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்