- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் கேரக்டர் மாதிரி, நிச்சயமா இவர் இல்லை, நன்றி மறக்காதவன் நான் என்று மனுஷன் நிரூபிச்சிட்டாரே...

அவர் கேரக்டர் மாதிரி, நிச்சயமா இவர் இல்லை, நன்றி மறக்காதவன் நான் என்று மனுஷன் நிரூபிச்சிட்டாரே – நடிகர் சூர்யா போட்ட திடீர் டிவீட்

- Advertisement -

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்போது கங்குவா படத்தை முடித்துவிட்டார். அடுத்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். கங்குவா படம், சூர்யா சினிமா பயணத்தில், மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபமாக, பருத்திவீரன் தயாரிப்பு பிரச்னையில் ஞானவேல் ராஜா பேசியது, அமீர் குறித்த தவறான விமர்சனத்தில் சூர்யா பெயரும் அடிபட்டது. நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத சூர்யாவுக்கு மௌனம் பேசியதே படம் மூலம், நடிக்க கற்றுக் கொடுத்ததே இயக்குநர் அமீர்தான் என்றும் விமர்சனம் எழுந்தது.

- Advertisement -

சூர்யா, கார்த்தி நினைத்தால் பருத்திவீரன் படத்தின் தயாரிப்புக்கான ஆன செலவை, ஒரு மணி நேரத்தில் அமீரை நேரில் அழைத்து கொடுத்துவிட முடியும். அந்தளவுக்கு கோடிகளில் புரளும் அவர்கள், ஏன் இந்த பிரச்னையை இன்னும் வளர்த்துக்கொண்டு, தேவையில்லாத விமர்சனங்களில் தங்கள் தந்தை சிவக்குமார் உட்பட குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கலாமே என்றும் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார். அதில், அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாக பங்கேற்கிறேன். கோடான கோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும். அவரை பூரண குணமாக்கி நலம் பெற வைக்கும் என, அந்த டிவிட்டரில் சூர்யா பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

நடிகர் சூர்யா சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அந்நிலையில், விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் சூர்யா, தன் காதலியுடன் விஜயகாந்திடம் தஞ்சமடைவார். அவர்களை விஜயகாந்த் பாதுகாப்பார். அப்படி நடித்த வகையில், சூர்யாவுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அந்த நன்றியை மறக்காமல், இப்போது அவர் உடல் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக சூர்யா டிவீட் பதிவிட்டுள்ளார்.

ஆனால் நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பலத்த கிண்டல், கேலிக்கு ஆளானார். ஏனெனில், நடிக்க வந்த ஆரம்பத்தில் ஒரு நடிகனுக்குரிய தோற்றத்தில், அவர் இல்லை என பலரும் கிண்டல் செய்தனர். அப்படி விமர்சித்து எழுதிய ஒரு பத்திரிகை அலுவலகத்தையே எஸ்ஏ சந்திரசேகர் தன் ஆட்களுடன் சென்று அடித்து நொறுக்கினார். ஆனால் விஜயகாந்துடன் விஜய் செந்தூரபாண்டி படத்தில் நடித்த பிறகு, ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஒரு நல்ல இமேஜ் கிடைத்தது. ஆனால் இன்று வரை உடல் நலம் இல்லாத விஜயகாந்தை, வீட்டிலும் சென்று விஜய் பார்க்கவில்லை. மருத்துவமனையில் இருந்த போதும் எட்டிப்பார்க்கவில்லை. சூர்யா போல, விஜய் ஒரு டிவீட் கூட பதிவிடவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்