- Advertisement -
Homeபொழுதுபோக்குலோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு- லியோ படத்தை தடை...

லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு- லியோ படத்தை தடை செய்யவும் கோரிக்கை

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில், ரஜினிகாந்த் 2வது மருமகன், அதாவது இளைய மகள் சவுந்தர்யாவின் கணவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து கைதி படமும் லோகேஷ் கனகராஜூக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்து விஜய் நடித்த மாஸ்டர் படமும் ஓரளவு வெற்றிப்படமாக இருந்தது. அடுத்து கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றியடைந்தது. அதன்பின் லியோ படமும் வசூலில் சாதனை புரிந்தது.

லோகேஷ் கனகராஜ் அடுத்து, ரஜினி 171 படத்தை வரும் ஏப்ரலில் துவக்க உள்ளார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்து இந்த ரஜினி 171 படத்தில்தான் நடிக்க உள்ளார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன் உள்பட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இதில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டில் ராஜூ முருகன் என்பவர்,லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது ஒரு வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில், லியோ படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் முழுக்க முழுக்க வன்முறை காட்சிகளே அதிகமாக உள்ளன. அவர் இயக்கிய மற்ற படங்களிலும், லியோ படத்திலும் ஒரே மாதிரியான வன்முறை காட்சிகளே அதிகமாக வருகின்றன.

குறிப்பாக போதைப் பொருட்கள் கடத்தல், போதை பொருட்கள் வியாபாரம், கலவரம், சட்டவிரோத செயல்கள், துப்பாக்கிகள், கத்திகளை பயன்படுத்துதல், போலீஸ் உதவியுடன் இந்த சமுதாயத்தில் எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்ய முடியும் என்ற கோணத்தில் லியோ படத்தில் காட்சிகளை அமைத்துள்ளார்.

தனது படங்களின் வாயிலாக போதைப் பொருள் பயன்பாடு, வன்முறை என இந்த சமுதாயத்துக்கு தவறான வழிகாட்டுதலை தொடர்ந்து செய்து வருகிறார். அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். லியோ படத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என அவர் அதில் கூறியுள்ளார். நீதிபதிகள் விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகததால் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில், ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்