- Advertisement -
Homeபொழுதுபோக்குபைசனுக்கு பிறகு எனது திரைப்படம் இதுதான்... உறுதிப்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ்... போடு... இந்த பிளான்...

பைசனுக்கு பிறகு எனது திரைப்படம் இதுதான்… உறுதிப்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ்… போடு… இந்த பிளான் பெருசா இருக்குது…

- Advertisement -

கடந்த வருடம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை அவர் எழுதியிருந்தார். வாழைத் தோட்ட தொழிலாளிகளின் கஷ்டத்தையும், அதற்குப் பின்னால் இருக்கும் சாதிய மனப்பான்மையையும் தோலுரித்துக் காட்டி இருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரது மனதையும் வேதனைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து, பைசன் என்னும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு கீழ் டேக் லைனாக காளமாடன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மணத்தி கணேசன் என்னும் கபடி வீரரின் வாழ்க்கையைதான் இந்த திரைப்படம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துவது போலவே துருவ்வின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்காகவே அவர் இரண்டு ஆண்டுகளாக காத்திருந்திருக்கிறார். அது மட்டுமல்ல கபடி விளையாட்டிலும் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். பசுபதி, லால், கலையரசன், அழகம்பெருமாள், அருவி மதன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

மாரி செல்வராஜ் படத்திற்காக முதல் முறையாக இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படம் குறித்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதில் அவர் கூறியதாவது,

நான் அடுத்த திரைப்படத்திற்காக தனுஷ் உடன் இணைய இருக்கிறேன். கர்ணன் திரைப்படத்தின் போதே இதற்கான ஒப்பந்தம் நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போனது. இது எளிமையான கதைதான் என்றாலும், மிகப்பெரிய அளவில் அது இருக்கும். எனது திரையுலக பயணத்திலேயே ஒரு மைல்கல்லாக இந்த திரைப்படம் இருக்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்