- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி நடித்த படத்துக்கு இப்படி ஒரு நிலமையா? வாங்கிய கடனை தயாரிப்பாளர் திருப்பித் தராததால்...

நடிகர் கார்த்தி நடித்த படத்துக்கு இப்படி ஒரு நிலமையா? வாங்கிய கடனை தயாரிப்பாளர் திருப்பித் தராததால் சென்னை நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் வெளியான மெய்யழன் படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் டீசர் எல்லாம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. பெரிய வரவேற்பை பெற்றன.

ஆனால் இந்த படம் ரிலீஸூக்கு தயாராகியும் பல நாட்களாக இன்னும் திரைக்கு வராமல் உள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது தான். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் திவால் ஆன தொழிலதிபர் அர்ஜூன் லால் சுந்தர் என்பவரிடமிருந்து 21 கோடி கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

- Advertisement -

வாங்கிய அந்த கடனை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜூன்லால் சுந்தருக்கு திருப்பி தரவில்லை. அந்த பணத்தைத திருப்பித் தரும் வரை வா வாத்தியார் படத்தை வெளியிடக் கூடாது என்று அர்ஜூன்லால் சுந்தர் தொடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அந்த படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இந்நிலையில் 3 கோடி 75 லட்சம் ரூபாய் கடனைச் செலுத்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாராக உள்ளது.

- Advertisement -

எனவே வா வாத்தியார் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் சி குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசம் அளித்துவிட்டது.

எனவே படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த அமர்வு, வா வாத்தியார் படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டது. முதல் முறையாக தமிழ் படம் ஒன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாமல் படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட நீதிமன்றம் உத்தரவிட்டது இதுவே முதல் முறையாகும். இது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்