இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டில் வெளிவந்த படம் காதல். பரத் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். டூவீலர் ஒர்க் ஷாப் மெக்கானிக் ஆக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சந்தியா என்ற நடிகை நடித்திருந்தார். இந்த படம் அபார வெற்றி பெற்றதால் காதல் சந்தியா என்றே பின்னாளில் பல படங்களில் அழைக்கப்பட்டார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவான இந்த படத்தில், பரத் நண்பராக சுகுமார் நடித்திருந்தார். பெற்றோருக்கு பயந்து காதலி சந்தியாவுடன் சென்னைக்கு ஓடிவரும் நண்பன் பரத்துக்கு தங்க இடம் தந்து, திருமணமும் செய்து வைக்கும் முக்கிய கேரக்டரில் சுகுமார் நடித்திருந்தார். அவரது கேரக்டரும் இந்த படத்தில் அதிக கவனம் பெற்றது.
அதனால் காதல் சுகுமார் என்றே அழைக்கப்படுகிறார். அவர் இந்த படத்தில் பிரபல நகைக்கடை முன்பு நாய் பொம்மை விற்பதும், பேச்சுலர் அறையில் தங்கிக்கொண்டு பந்தா செய்வதும் என சுகுமார் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதே நேரத்தில் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக அவர் படும் கஷ்டங்களும் ரசிகர்கள் மனதில் நின்றது. கலகலப்பு விருமாண்டி வசூல் ராஜா எம்பிபிஎஸ் பொன்னான நேரம் உள்ளிட்ட பல படங்களில் காதல் சுகுமார் நடித்திருக்கிறார். சரியான வாய்ப்புகள் இல்லாததால் சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் துணை நடிகை ஒருவர், காதல் சுகுமார் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, வடபழனியை சேர்ந்த எனக்கு, ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளது. கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் காதல் சுகுமாருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்பு இருவரும் காதலித்து வந்தோம். மேலும் நடிகர் சுகுமார் அவருக்கு ஏற்கனவே திருமணமானதை என்னிடம் மறைத்து விட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக நகைகள் பணம் என நிறைய வாங்கியுள்ளார்.
ஆனால் இப்போது எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று கூறி என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றப்படுகிறார். எனவே என்னை ஏமாற்றி பண மோசடி செய்த நடிகர் சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அந்த துணை நடிகை கூறியுள்ளார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





