- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் ஓடும் என்று நினைப்பதே தவறு - தனுஷ் படங்களை...

பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் ஓடும் என்று நினைப்பதே தவறு – தனுஷ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படி போட்டு தாக்கிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் துரை செந்தில் குமார், விடுதலை படத்தை தொடர்ந்து சூரி நாயகனாக நடித்த கருடன் படத்தை இயக்கிய டைரக்டர். இவர் முதலில் டைரக்ட் செய்த படம், எதிர்நீச்சல். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றிப் படமாக இருந்தது. அதனால் சிவகார்த்திகேயன் இமேஜ் மேலும் அதிகரித்தது. தொடர்ந்து துரை செந்தில்குமார் தனுஷ் இரட்டை நாயகர்களாக நடித்த கொடி மற்றும் பட்டாஸ் என்ற 2 படங்களை இயக்கினார்.

- Advertisement -

இந்த 2 படங்களுமே சரியாக போகவில்லை. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கொடி படத்தில் தனுஷை அரசியல்வாதியாக காட்டியிருந்தார் துரை செந்தில்குமார். அதே போல் பட்டாஸ் படத்தில், பிடிவரிசை என்னும் சண்டை பயிற்சியை மையப்படுத்தி எடுத்திருந்தார். ஆனால் 2 படங்களுமே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

அதன்பிறகு, விடுதலை படத்தில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிசெய்த துரை செந்தில்குமார், படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த ரயில் விபத்து காட்சியை, அவரே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 நிமிடங்களுக்கு மேல் படத்தில் இடம்பெற்ற இந்த காட்சியை இயக்கும் பொறுப்பை, துரை செந்தில்குமாரிடமே தந்திருக்கிறார் வெற்றிமாறன்.

- Advertisement -

அதன்பிறகு இப்போது சூரியை நாயகனாக வைத்து துரை செந்தில் குமார் இயக்கியுள்ள படம் கருடன். இந்த படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த வாரத்தில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. சசிக்குமார், உன்னிமுகுந்தன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதையடுத்து லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் துரை செந்தில்குமார்.

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய துரை செந்தில்குமார், எந்த நடிகரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் ஓடும் என்று நினைப்பது எந்த அளவுக்கு தவறோ, அதே போல் லெஜண்ட் சரவணா நடித்தால் படம் ஓடாது, பிளாப் ஆகும் என்று நினைப்பதும் தவறுதான். அவரை வைத்து எந்த அளவுக்கு சிறந்த படத்தை தரமுடியுமோ, அந்த அளவுக்கு என் உழைப்பை தந்து அந்த படத்தை தருவேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்