- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தடை செய்ய வேண்டும் ; வழக்கை விசாரித்த நீதிமன்றம்...

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தடை செய்ய வேண்டும் ; வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியான படம் லியோ. இந்த படத்தில் விஜய் திரிஷா சஞ்சய் தத் அர்ஜூன் மிஷ்கின் பிரியா ஆனந்த் கௌதம் மேனன் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார்.

லியோ படத்தில் லியோதாஸ் பார்த்திபன் என்ற 2 கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக சில குறைகள் இந்த படத்தில் இருந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 525 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலில் சாதனை படைத்தது.

- Advertisement -

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடித்த தி கோட் படம் கடந்தாண்டில் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது. இப்போது விஜய் எச் வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். மேலும், தனது 70வது படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்திருப்பதாகவும் அந்த படத்தை வெங்கட்பிரபு அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தொடர்ந்த தமிழக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். நேற்று பந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தது வைரலாகி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் லியோ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளதால், அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் சென்னை ஐ கோர்ட் மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மரிய கிளாட் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது லியோ படக்குழு தரப்பில் அதன் வழக்கறிஞர் ஆஜரானார். இந்த வழக்கு விளம்பர நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து படக்குழு தரப்பின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், லியோ படத்தை தள்ளுபடி செய்யக் கோரும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர். இது தளபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்