- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு மோசமான பழக்கம் காமெடி நடிகர் ஜனகராஜிடம் இருந்ததா? அவரை ஒதுக்கிய...

இப்படி ஒரு மோசமான பழக்கம் காமெடி நடிகர் ஜனகராஜிடம் இருந்ததா? அவரை ஒதுக்கிய நடிகர்கள் ரஜினி, கமல் – காரணம் இதுதானா…

- Advertisement -

கடந்த 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடியில் கொடி கட்டிப் பறந்தனர். அதே காலகட்டத்தில் எஸ்எஸ் சந்திரனும் பீல்டில் இருந்தார். அதே போல் எஸ்வி சேகரும் காமெடி படங்களில் நடித்தார். அந்த காலகட்டத்தில் மற்றொரு முக்கிய காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் ஜனகராஜ்.

வைகாசி பொறந்தாச்சு நெத்தியடி பிரதாப் பணக்காரன் படிக்காதவன் காதல் பரிசு அருணாசலம் வீட்ல விசேஷம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள் ஜோடி கோபாலா கோபாலா ராஜா கைய வெச்சா என பல படங்களில் ஜனகராஜின் காமெடி நடிப்பு இப்போதும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

- Advertisement -

காமெடி கேரக்டர்களில் மட்டுமின்றி சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ஜனகராஜ் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 96 படத்தில் பள்ளிக்கூட வாட்ச்மேன் கேரக்டரில் ஜனகராஜ் நடித்து ரீ என்ட்ரி தந்திருந்தார்.

நடிகர் பாண்டியராஜன் இயக்கிய கன்னி ராசி படத்தில் டிவி புகழ் பாடகராக ஜனகராஜ் நடித்திருப்பார். பிரபுவின் காதலி ரேவதியை ஒருதலையாக காதலிப்பார். ரஜினி கமல் பாக்யராஜ் பாண்டியராஜன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை வெகுவாக இழந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ரஜினி கமல் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வெகுவாக குறைந்து போனது. இடையில் ஒருமுறை விபத்தில் சிக்கியதாலும் அவர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனகராஜை பொருத்த வரை அவர் டயலாக் பேசும் ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவரும். குறிப்பாக வேணு என நெத்தியடி படத்தில் பாண்டியராஜனை அவர் அழைப்பதே ரசிக்கும்படி இருக்கும்.

சிறந்த நடிகராக இருந்தாலும் ஜனகராஜிடம் உள்ள மோசமான பழக்கம், யார் அவரிடம் பேசினாலும் விதண்டாவாதம் பேசுவதுதான். அதாவது ஒருவர் ஒரு விஷயத்தை சொன்னால் அதற்கு எதிர்மறையாக நேருக்கு மாறாக பேசுவது அவரது பழக்கமாக இருந்துள்ளது. இதனால் யாருடன் பேசினாலும் அவர்களிடம் எதிர்வாதம் பேசி சண்டையிடும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. இதனால் ஜனகராஜ் தங்களுடன் நடிப்பதையே ரஜினி கமல் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்