- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படும் நடிகர் விஜய்… ஆனால் தமிழ் மக்களை மதிக்கவில்லையா? - தளபதி மீது...

தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படும் நடிகர் விஜய்… ஆனால் தமிழ் மக்களை மதிக்கவில்லையா? – தளபதி மீது எழுந்த பகீர் விமர்சனம்!

- Advertisement -

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக மாறி 2 ஆண்டுகள் ஆகிறது. வருகிற பிப்ரவரி 2ம் தேதி டிவிகே கட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அந்த விழா பனையூரில் உள்ள டிவிகே தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால் இதுவரை 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் ஒருமுறை கூட செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவில்லை. பிரஸ்மீட் நடத்தி தமிழக ஊடகங்களை நேரடியாக சந்தித்து பேசவில்லை. ஒருமுறை ஜனநாயகன் படப்பிடிப்புக்காக மதுரை சென்ற போது, என்னை ரசிகர்கள் வாகனங்களில் பின்தொடர வேண்டாம் என்று மட்டும் செய்தியாளர்களிடம் நேரில் சொன்னார்.

- Advertisement -

மற்றபடி இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை நடிகர் விஜய் முற்றிலும் தவிர்த்து வருகிறார். டிவிகே கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் மற்றும் கட்சியின் சில நிர்வாகிகள் மட்டுமே அவ்வப்போது செய்தியாளர்களிடம் பேசி வருகின்றனர். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் பேட்டியளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இது கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ் ஊடகங்களை சந்திக்க மறுக்கும் விஜய் ஆங்கில ஊடகத்தில் மட்டும் நேர்காணல் செய்ய முன்வந்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

தமிழ்நாட்டில் பல ஊடகங்கள் அரசியல் சார்ந்தவையாக இருப்பதால் அந்த ஊடகங்களை சந்திப்பதை நடிகர் விஜய் தவிர்ப்பதாக சொன்னாலும் அது எல்லா அரசியல் கட்சி தலைவர்களுமே எதிர்கொள்கிற பிரச்னையாக தான் உள்ளது. எந்த அரசியல் சார்பு இருந்தாலும் தனது கட்சி கொள்கைகளை சமூக பிரச்னைகளை பேச விஜய் தயங்க வேண்டிய அவசியம் இல்லை.

அதனால் நடிகர் விஜய் தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கு முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படும் நிலையில், தமிழக ஊடகங்களை தமிழ் செய்தியாளர்களை சந்திக்க மறுத்து ஆங்கில ஊடகத்தில் பேசியிருப்பது பெரிய சர்ச்சையாக மாறி பேசு பொருளாக இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் செய்தியாளர்களை சந்திக்க விஜய் மறுக்க காரணம் விஜய்க்கு பதில் சொல்ல தெரியாது என்றும் பலர் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்