நடிகர் அஜீத்குமார் மற்ற நடிகர்களை காட்டிலும் மிகவும் வித்யாசமானவர். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழிக்கு ஏற்ப மற்ற ஹீரோக்கள் எல்லாம் மார்க்கெட் இமேஜ் இருக்கும் போதே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடிக்கும் சூழலில், அஜீத்குமார் மட்டும் படங்களில் நடிக்காமல் கார் ரேஸ் பைக் ரேஸ் என மாதக்கணக்கில் வெளிநாடு போய் விடுகிறார்.
மற்ற ஹீரோக்கள் எல்லாம் ரசிகர்களை சந்திப்பது, ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுப்பது, ரசிகர்களுக்கான கூட்டம் நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று செய்யும் நிலையில் அஜீத்குமார் ரசிகர்களை பார்த்தாலே அலர்ஜி என்கிறார். அவர் நடித்த படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளுக்கே அவர் வரமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே என்னுடைய சுய நலத்துக்காக என் ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜீத்குமார் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த கொள்கைகக்கு மாறாக அவர் இப்போது செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் விஷத்தன்மை வாய்ந்ததாக கூறப்படும் குளிர்பான விளம்பரத்தில் அவர் நடித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே மற்றொரு லேட்டஸ்ட் தகவலும் இப்போது கிடைத்துள்ளது. சென்னை மெரீனா பீச் போன்ற பகுதிகளில் குதிரை சவாரி செய்வது வழக்கம். அங்குள்ள குதிரைக்காரர் தனது குதிரையில் ஒரு ரவுண்ட் சவாரி அழைத்துச் சென்று வர குறிப்பிட்ட கட்டணம் வரை வசூலிப்பது வழக்கம். அந்த பார்மூலாவை நடிகர் அஜீத்குமார் இப்போது பின்பற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
துபாயில் நடந்து வரும் கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் இப்போது கலந்துக்கொண்டு இருக்கிறார். அங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அஜீத்குமார் ரசிகர்களாக இருக்கின்றனர். அதனால் நடிகர் அஜீத்குமாருடன் காரில் ஒரு ரவுண்ட் போய் வர ரூ. 90 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்து வசூலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது நடிகர் அஜீத்குமார் கார் ஓட்ட அவரது காரில் அமர்ந்து பயணிக்கவும் அவருடன் செல்பி வீடியோ எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படும் நிலையில் இதற்கு நபருக்கு இந்திய பண மதிப்பில் ரூ. 90 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. மெரீனா பீச்சில் குதிரை சவாரி போல, அஜீத்குமார் துபாயில் கார் ஓட்டி கட்டணம் வசூலிப்பதாக பலரும் கலாய்த்து வருகின்றனர்.





