நடிகர் ஜீவாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய வெற்றிப் படமாக தலைவர் தம்பி தலைமையில் படம் டிடிடி அமைந்துள்ளது. பொங்கலுக்கு வெளியான பராசக்தி வா வாத்தியார் டிடிடி ஆகிய 3 படங்களில் இப்போதைக்கு ரசிகர்கள் கொண்டாடும் ஒரே படமாக டிடிடி மட்டுமே இருந்து வருகிறது. இது நடிகர் ஜீவாவுக்கு சூப்பர் கம்பேக் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் ஜீவா மீது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது டிடிடி படத்தை தயாரித்தவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் ரவி. இந்த படத்துக்கான மொத்த செலவையும் அவர்தான் கவனித்துள்ளார். அதே நேரத்தில் இந்த படத்துக்கு நடிகர் ஜீவா கிரியேடிவ் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
நடிகர் ஜீவாவின் மேனேஜர் முத்துக்குமார் என்பவர்தான் டிடிடி என்ற படத்தின் தயாரிப்பு செலவுகளை கவனித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் ஷூட்டிங் செலவு கணக்குகள் இன்னும் தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் தரப்பில் பலமுறை கேட்டும் ஜீவா தரப்பில் இருந்து கணக்குகள் தரப்படவில்லை.
இந்த படம் இப்போது பெரிய வெற்றியை பெற்று பெரிய அளவில் வசூலை குவித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு பின்னணியில் வேறு ஒரு சம்பவமும் நடந்துள்ளது. இந்த படத்தில் நடிக்க நடிகர் ஜீவாவுக்கு பேசிய சம்பளம் ரூ. 2 கோடிதான். ஆனால் மற்றொரு பெரிய நிறுவனத்தில் நடிக்க கமிட் ஆன நடிகர் ஜீவா தனது சம்பளம் ரூ. 5 கோடி என பேசியிருக்கிறார். அதற்காக டிடிடி தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம் பேசி ரூ. 4 கோடி என தனது சம்பளம் என குறிப்பிட்டு அக்ரிமென்ட் போட்டு தருமாறு கூறியிருக்கிறார்.
நடிகர் ஜீவாவுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்கிற மகிழ்ச்சியில், அதற்கும் ஓகே சொன்ன தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஜீவாவுக்கு சம்பளம் ரூ. 4 கோடி என்று அக்ரிமென்ட் தந்தது மட்டுமின்றி டிடிடி படம் வெற்றிக்கரமாக ஓடி வசூலை குவித்து வருவதால் அதில் போட்டபடியே ரூ. 4 கோடி சம்பளத்தையும் ஜீவாவுக்கு தந்திருக்கிறார். இப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக அவர் உள்ளார்.
ஆனால் படத்தின் தயாரிப்பு செலவுகள் குறித்து அதன் பொறுப்பாளராக பணிசெய்த ஜீவாவின் மேனேஜர் முத்துக்குமார் இதுவரை அதற்கான செலவு கணக்குகளை தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கவில்லை. படத்தின் நாயகன் ஜீவா, கிரியேடிவ் தயாரிப்பாளர் என்ற முறையில் தனது மேனேஜரிடம் சொல்லி அந்த செலவு கணக்குளை தயாரிப்பாளரிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தவில்லை என்கிற இந்த தகவலை வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





