- Advertisement -
குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படம் டேர் டெவில். இந்த படத்தை தனது மனைவி ஷாலினி பெயரில் நடிகர் அஜீத்குமாரே சொந்தமாக தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். வரும் நவம்பர் 2ம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில் 10 நாட்கள் கழித்து நவம்பர் 12ம் தேதிக்கு ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 8ம் தேதி தீபாவளி வருவதாலும், பண்டிகை நாளில் ஷூட்டிங் நடத்தினால் 3 மடங்கு சம்பளம் தொழிலாளர்களுக்கு தரவேண்டிய சூழல் இருப்பதாலும் நவம்பர் 12ம் தேதிக்கு தயாரிப்பாளராக யோசித்து நடிகர் அஜீத்குமார் படப்பிடிப்பை தள்ளி வைத்ததாக தெரிய வந்துள்ளது.





